
வெளிச்சத்திலும்
இருண்டு கிடக்கும்
மனங்கள்
விளக்கை காணமலே
மாண்டு விடும்
விட்டில்கள்
இறக்கவே மாட்டோம்
என்பது போல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பது போல்
இறக்கும் மனிதர்கள்
ஆசை எனும்
ஈரமான தலையில்
தேவை என்ற
பாரமான சுமைகளுடன்
சுகமாய் வாழ்வதாய்
நமக்குள் ஒரு
சொப்பனம்
விடிந்த பிறகும்
திறக்க மறுக்கும்
இமைகள்
அறிந்த பிறகும்
உணர மறுக்கும்
மனங்கள்.
இப்படி
வாழ்கை எனும்
பாதையில்
வழிநெடுக
வழுக்கல்கள்.
7 கருத்துகள்:
அருமையான ஆழமான கவிதை
தலைப்பில் மட்டும்தான், கருத்துகளில் இல்லவே இல்லை ‘வழுக்கல்’.
அருமையான வரிகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு இஸமத், திரு கதிம் அண்ணன், திரு வேலு.
பின்னூட்ட வழி நூல் பிடித்து வந்து இங்கே வழுக்கி விழுந்தேன் இன்று :)
நீங்களும் பதிவர்தாமா ?
வழுக்கலில் வழுக்காமல் வார்தைகள்.
வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா
கருத்துரையிடுக