வெள்ளி, ஏப்ரல் 24, 2009

அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்

அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்

சி. ஜெயபாரதன், கனடா.


பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்!


மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகக் கனவு கண்டு, காவியங்கள் எழுதி, காற்றில் பறக்கவும் முயன்றிருக்கிறான். புராண இதிகாசக் காவியங்களில் புஷ்பக விமானங்கள் இருந்ததாக நாம் படித்திருக்கிறோம்! விஞ்ஞானக் கதைகள் எழுதிய பல எழுத்தாளர்கள், ஃபிரான்ஸிஸ் காட்வின் [1562-1633], சாமுவெல் பிரன்ட் [1727], ஜூல்ஸ் வெர்ன் [1828-1905] போன்றோர் அண்ட வெளிப் பயணங்களை யும், வான ஊர்திகளைப் பற்றியும் எழுதிப் பறப்பியல் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்! இத்தாலிய ஓவியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி [1452-1519] தன் குறிப்புத் தாள்களில் பறவையைப் போன்று 'இறக்கை இயக்கும் ஊர்திகளை ' [Ornithopters] டிசைன் செய்து படத்தில் வரைந்து காட்டி யிருக்கிறார். அந்த ஊர்தியில் விளக்கமுடன், தோளில் இணைத்த சிறகுகள், நுழைக் கதவுகள், உள்ளடங்கி [Retractable], அதிர்வை விழுங்கிக் [Shock-absorbing], கீழுருளும் கால்கள் [Landing Legs] அமைக்கப் பட்டிருந்தன! ஆனால் டவின்ஸியின் விமானம் வரை படத்திலிருந்து வடிவக அமைப்பில் வரவில்லை! முதன் முதலில் மனிதனைத் தரைக்கு மேலே தூக்கி வானில் பறந்தது, 1783 இல் டிரோஷியர் [DeROZIER] படைத்த, காற்றை விடக் கன மில்லாத, 'தீவாயு பலூன் ' [Fire-Balloon]! ஆனால் பலூன்கள் யாவும் காற்றின் தயவில் பறப்பதால், அவற்றைக் கட்டுப் படுத்துவது கடினமாய்ப் போனது! 1893 இல் ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல், தன்னுடன் மாபெரும் இறக்கைகளை மாட்டிக் கொண்டு, ஒரு குன்றுச் சரிவில் ஓடிச் சிறிது தூரந்தான் பறக்க முடிந்தது! ஆனால் பாவம் 1896 ஆண்டு சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து தரையில் உடைந்து, அவர் மாண்டு போனார்!லியனார்டோ டவின்ஸி மற்றும் பின்பு முயன்றவர் யாவரும், 'வானில் தாவிப் பறப்பதற்குரிய தசைச் சக்தி மனிதனுக்கு உண்டு ', என்னும் தவறான ஓர் அடிப்படைக் கொள்கையைக் கொண்டிருந்தனர்! மெய்யாக அந்தச் சக்தியைக் கடவுள் மனிதனுக்கு அளிக்கவில்லை! அடுத்த அடிப்படைத் தவறு: 'பறவைகள் தம் இறக்கைகளை கீழ்நோக்கியும், பின்னோக்கியும் அடித்து, காற்றில் உந்தி நீடித்துப் பறக்கின்றன '. அதாவது, மனிதன் நீரில் நீந்திடும் போது, கை கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி உந்துவது போல், பறவைகளும் இறக்கை களால் செய்கின்றன! இதுவும் தவறானதே! கீழ் நோக்கி அடிக்கையில், ஒரு பறவை தன் இறக்கைகளைப் பின்னோக்கி அடிக்க இயலாது. அப்படியெனில் பறக்கும் போது, ஒரு பறவையின் இறக்கைகளில் என்னதான் நிகழ்கிறது ? பெரும் பான்மையான பறவை இனங்களுக்கு, இறக்கையின் ஓரத்தில் ஐந்தாறு சிறப்புச் சிறகுகள் உள்ளன. கீழ் நோக்கி இறக்கை அடிக்கும் போது, இந்தச் சிறப்புச் சிறகுகள், 'சுழற் தட்டுகள் ' [Propeller Blades] போன்று சக்தியோடு சுழற்றிப், பறவை யானது முன்னோக்கி உந்திப் பாய்கிறது. அதிவேகக் காமிராக்கள் எடுத்த சோதனைப் படங்களில், பறவையின் இறக்கைகள் கீழடிக்கும் போது அவற்றின் நுனிச் சிறகுகள் சுழற்றுவதையும், இறக்கைகள் முன்னோக்கி வளைவதையும் காண முடிகிறது. ஆதலால் மனிதன் பறக்க வேண்டு மென்றால், இதுவரை பயன் படுத்திய இறக்கைகளை ஒதுக்கி விட்டு, வேறு புது முறைகளைக் கையாள வேண்டும்!பறக்கும் யுகத்தின் நுழைவாயிலை முற்றிலும் திறந்தார்கள்


பறக்கும் வாகனமாக, மனிதன் இதுவரைக் கையாண்டவை, வாயு பலூன், வாயுக்கப்பல் [Airship], பொறி யில்லா ஊர்தி [Glider], எஞ்சினுள்ள விமானம் [Powered Aircraft], ஏவு கணை [Rocket] போன்றவை! ஆனால் 1903 டிசம்பர் 17 ஆம் நாள் முதன் முதல் வெற்றிகரமாய் ஊர்தியை எஞ்சின் பொறியால் இயக்கி, பறப்பியல் உந்தலைக் கட்டுப் படுத்தி, நீடித்துப் பறந்த [Powered, controlled & Sustained Flight] படைப்பு மேதைகள், அமெரிக்காவின் சரித்திரப் புகழ் பெற்ற அபூர்வ சகோதரர்கள், வில்பர் ரைட் & ஆர்வில் ரைட் [Wilbur Wright & Orville Wright]. கல்லூரிக் கல்வியோ, பட்டப் படிப்போ எதுவும் இல்லாமல், வெறும் உயர்நிலைப் பள்ளிப் படிப்போடு, சைக்கிள் மெக்கானிக்காகப் பணியாற்றி, விமானத் துறையில் பேரார்வம் காட்டி, அவர்கள் இருவரும் வெற்றி பெற்றது விந்தையிலும் விந்தையே! இத்தாலியில் தி லானா [De Lana 1670], பிரான்ஸில் மாண்ட் கால்பியர், பிளான்சார்டு [Josepf & Etienne Montgolfier, Blanchard 1783-1785], பிரிட்டனில் கேய்லி [George Cayley 1804-1852], பிரான்ஸில் வெர்ன், கோடார்டு [Jule Verne & Godard 1828-1905], சாமுவெல் ஹென்சன் [Samuel Henson 1842], பிரான்ஸில் ஜல்லியன், து டெம்பிள் [Pierre Jullien 1850, Felix Du Temple 1857-1874], அமெரிக்காவில் லாங்கிலி [Dr. Samuel Langley 1896-1903], பிரேஸிலில் துமாண்ட் [Alberto Dumont 1898], ஜெர்மனியில் லிலியென்தால் [Otto Lilienthal 1868-1896], பிரென்ச் அமெரிக்கன் சனூட் [Octave Chanute 1896-1901] போன்ற பறப்பியல் விஞ்ஞானத்தின் முன்னோடி மேதைகளாக இருந்தாலும், 1905 இல் உலகிலே முதன் முதல் செயல்முறை விமானத்தை [Practical Plane] உருவாக்கி அதில் பறந்து காட்டியவர்கள் ரைட் சகோதரர்களே! இருபதாம் நூற்றாண்டில், பறக்கும் யுகத்தின் நுழைவாயிற் கதவை முற்றிலும் திறந்து வைத்தவர்கள், ரைட் சகோதரர்களே!


ரைட் சகோதரர்களின் பிறப்பும், வளர்ப்பும், விருப்பும்.


வில்பர் ரைட் மில்வில் [Millville], இண்டியானாவில் 1867 ஏப்ரல் 16 ஆம் தேதி யிலும், ஆர்வில் ரைட் டேடன், ஒஹையோவில் 1871 ஆகஸ்டு 19 ஆம் தேதியிலும், கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தவர் கள். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில்தான் இருவரும் படித்தவர்கள். இரு வரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப் படவில்லை! சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும் படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை.


தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன் களுக்குப் 'பனிச் சறுக்கி ' [Sled] எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய். 'முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் ' என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய்! அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச் சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர்.


ஒரு சமயம் தாயுடனும் தம்பியடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானி லிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். 'பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா ? ' என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான்! 'இறக்கை களால் பறக்கிறது ' என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்க வில்லை. 'எப்படி அம்மா ? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா! ' என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. 'நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா ? ' என்றான் வில்பர். 'கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்க வில்லை ' என்றாள் தாய். 'இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக் கொள்ளலாம், அம்மா ' என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர்!


தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மான மான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள்! ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி! இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறி நுணுக்க அறிவும், ஒப்பில்லாத யந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள்.


தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு யந்திரங்களைப் [Printing Machines] புதிதாய் டிசைன் பண்ணி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை டிசைனும் உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896 இல் ஆக்டேவ் சனூட்ஸ் [Octave Chanutes] எழுதிய 'பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ' [Progress in Flying Machines] வெளியீடு களை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற் பாங்கான தளத்தில், ஐந்து விதப் 'பொறியிலா ஊர்திகளை ' [Gliders] ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900 இல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனை களை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.


விமானத்தில் முதல் முப்புற அச்சு முறைக் கட்டுப்பாடு


ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896 இல் தான் ஹென்ரி ஃபோர்டு [1863-1947] தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டாசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி [Aerodynamics], கட்டமைப்புப் பொறித்துறை [Structural Engineering] ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது!ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் 'பொறியிலா ஊர்தியில் ' [Glider] 1891 இல் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் யந்திரத்தில் மோக முற்றார். 1896 இல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார். 1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, 'மூன்று அச்சு முறையில் ' [Three Axes] இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, 'முன் நகர்ச்சி ' [Thrust], 'மேல் எழுச்சி ' [Lift], 'திசை திருப்பி ' [Turning Left or Right] ஆகிய 'முப்புறக் கட்டுப்பாடு ' என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார். பறவையைப் போன்று, பறக்கும் யந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும்! மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப் பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப் பட்டது. எழுச்சி அளிப்பதற்கு 'தூக்கிகள் ' [Elevators] வேண்டி யிருந்தன. பக்க வாட்டில் திருப்ப 'திருப்பி ' [Rudder] வால்புறம் மாட்டப் பட்டது.


விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் 'பறப்பியல் கட்டுப்பாடு ' [Flight Control] மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899 இல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த 'இரு தளப் பட்டத்தில் ' [Bi-Plane Kite] சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது. எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, 'முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் ' பொறியமைப் பைக் கண்டு பிடித்து வெற்றி கரமாய்ப் பயன்படுத்திப் 'பறப்பு யந்திரவியலைச் ' [Aerodynamics] செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர் களுக்கு மட்டுமே சாரும்.


எஞ்சின் இயக்கும் விமானத்தைச் சோதிப்பதற்கு முன், 1900 முதல் 1902 வரை மூன்று ஆண்டுகள், கிட்டி ஹாக், வட கரொலினாவில் [Kitty Hawk, North Carolina] பொறி இல்லாத மூன்று ஊர்திகளைச் [Gliders] காற்று எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் 'கில் டெவில் ஹில் ' [Kill Devil Hill] என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தார்கள்! டேடன் ஓஹையோவில் முதன் முதல் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றை நிறுவி, 200 விதமான இறக்கைகளைப் பல மாதங்கள் இருவரும் ஆராய்ச்சி செய்து, கடேசியில் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். மூன்றாவது படைக்கப் பட்ட ஊர்திதான் முழுக் கட்டுப்பாடு உடையது. மேலும் கீழும் எழுச்சி [Lift] உண்டாக்கும் 'தூக்கி ' [Elevator] ஊர்தியின் முன்புறமும், இடது-வலது பக்கம் திரும்ப 'திருப்பி ' [Rudder] பின்புறமும், ஊர்தி உருள்வதற்கு 'இறக்கைச் சுழற்றி ' [Wing Wrapper] இரு புறமும் அதற்கு அமைக்கப் பட்டிருந்தன!


இரண்டு சிரமமான பிரச்சனைகள்: திறம் மிக்க, பளுவற்ற அப்போது இல்லாத 'சுழலாடிகள் ' [Propellers] முதலாவது, டிசைன் செய்யப் பட்டு அமைக்கப் படவேண்டும். இரண்டாவது தகுதியான எடை சிறுத்த, எஞ்சின் ஒன்று தயாரிக்கப் படவேண்டும். அந்தக் காலத்தில் படைக்கப் பட்ட எஞ்சின்கள் யாவும் மிகக் கனமாக விமானத்தில் இணைக்கத் தகுதி யற்றவையாய் இருந்தன!


1903 இல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட 'கிட்டி ஹாக் ' [Kitty Hawk] என்னும் Flyer I டிசம்பர் 17 ஆம் தேதி பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது! விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு மற்றும் இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப் பட்டு, சிறப்பிக்கப் பட்டு, 1905 இல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது; சிரமம் இன்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது! பக்க வாட்டில் திரும்பியது! 1908 இல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டி யிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள். பயணம் தடைப் பட்டதற்குப் பெரும் பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான்! எஞ்சினும் சிறியது! பெட்ரோல் கலனும் சிறியது!


1909 இல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப் பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது!


விண்வெளியில் ஏறி வெண்ணிலவில் கால்வைத்தார்.


1912 மே மாதம் 30 ஆம் தேதி வில்பர் டைஃபாய்ட் காய்ச்சலில் உயிர் துறந்து, ஆர்வில் தனித்து விடப் பட்டார். அடுத்து 35 ஆண்டுகள் விமானச் செம்மைப் பாட்டில் ஆழ்ந்து பங்கெடுத்து ஆர்வில் 1948 ஜனவரி 30 ஆம் தேதி காலமானார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரிகள். பூமியில் சாதாரண சைக்கிள் மெக்கானிக்களாக ஆரம்பித்து, வானில் மிரக்கிள் மெக்கானிக்களாக மேலுயர்ந்த அமெரிக்காவின் அபூர்வ சகோதரர்களின் அபாரத் திறமையை என்ன வென்று வியப்பது ? 1903 இல் அபூர்வ சகோதரர்கள் 12 வினாடி காலம் 120 அடி பயணம் செய்து பறப்பியல் அடிப்படையாகி, அண்ட வெளியில் நீல் ஆர்ம்ஸ்டாங் ஏவுகணைச் சிமிழில் 250,000 மைல் பறந்து, வெண்ணிலவில் முதன் முதல் 1969 இல் கால் வைக்க உதவியதைச், சரித்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறை சாற்றிக் கொண்டே இருக்கும்!


thanks to thinnai.com
**************************

NEVER SICK AGAIN

HEADACHES : FISH (PROTEIN)
Eat lots of fish as fish oil helps to
prevent headaches. So does ginger
which reduces inflammation and pain.
HAYFEVER : YOGHURT
Eat lots of yoghurt before pollen
season.
STROKES : TEA
Prevents buildup of fatty deposit
on artery walls with regular doses
of tea.
INSOMNIA : HONEY
Use Honey as a tranquilizer and
as a sedative.
ASTHMA : ONIONS (RED)
Eating onions helps ease
constriction of bronchial tubes.
ARTHRITIS : FISH
Salmon, tuna, mackerel and
sardines actually prevent arthritis.
UPSET STOMACH : BANANAS,
GINGER : Bananas will settle an
upset stomach. Ginger cures
morning sickness and nausea.
BLADDER INFECTIONS :
CRANBERRY JUICE : High-acid
cranberry juice controls harmful
bacteria.
BONES PROBLEMS :
PINEAPPLE Bones fractures and
osteoporosis can be prevented by
the manganese in pineapple.
PMS : CORNFLAKES
Women can ward off the effects of
PMS with cornflakes, which help
reduce depression, anxiety & fatigue.
MEMORY PROBLEMS : OYSTERS
Oysters help increase your mental
functioning by supplying much needed
zinc.
COUGH : RED PEPPER
A substance similar to that found
in cough syrup is found in hot red
pepper.
BREAST CANCER : WHEAT
BRAN, CABBAGE : Wheat bran
and cabbage help maintain
estrogen at healthy levels.
LUNG CANCER : ORANGE,
GREEN VEGETABLES : A good
antidote is beta-carotene, a form of
Vitamin A found in orange & green
vegetables.
ULCERS : CABBAGE
Cabbage contains chemical that
help heal both type of ulcers.
DIARREA : APPLES
Crate an apple with its skin. Let it
turn brown and eat it to this
condition.
CLOGGED ARTERIES :
AVOCADOS
Mono-unsaturated fat in avocados
lower cholesterol.
HIGH BLOOD PRESSURE :
OLIVE OIL, CELERY : Olive oil has
been shown to lower blood pressure.
Celery contains a chemical that lowers
blood pressure too.
BLOOD SUGAR IMBALANCE :
BROCOLLI, PEANUTS : The
chromium in broccoli and peanuts helps
regulate insulin and blood sugar.
ATTACH TO REFRIGERATOR
DOOR, WALL OR THE
BULLETIN BOARD FOR HANDY
REFERENCE.
NEVER SICK AGAIN

How much water do you need a day?

How much water do you need a day?

Water is an important structural component of skin cartilage, tissues and organs. For human beings, every part of the body is dependent on water. Our body comprises about 75% water: the brain has 85%, blood is 90%, muscles are 75%, kidney is 82% and bones are 22% water. The functions of our glands and organs will eventually deteriorate if they are not nourished with good, clean water.

The average adult loses about 2.5 litres water daily through perspiration, breathing and elimination. Symptoms of the body's deterioration begins to appear when the body loses 5% of its total water volume. In a healthy adult, this is seen as fatigue and general discomfort, whereas for an infant, it can be dehydrating. In an elderly person, a 5% water loss causes the body chemistry to become abnormal, especially if the percentage of electrolytes is overbalanced with sodium.One can usually see symptoms of aging, such as wrinkles, lethargy and even disorientation. Continuous water loss over time will speed up aging as well as increase risks of diseases.

If your body is not sufficiently hydrated, the cells will draw water from your bloodstream, which will make your heart work harder. At the same time, the kidneys cannot purify blood effectively. When this happens, some of the kidney's workload is passed on to the liver and other organs, which may cause them to be severely stressed. Additionally, you may develop a number of minor health conditions such as constipation, dry and itchy skin, acne, nosebleeds, urinary tract infection, coughs, sneezing, sinus pressure, and headaches.

So, how much water is enough for you? The minimum amount of water you need depends on your body weight. A more accurate calculation, is to drink an ounce of water for every two pounds of body weight.Here is the calculation for your minimum water need per day

Your weight 30 kg Enter your weight only !!!
Requirement 990 ml

YOU NEED TO DRINK THIS AMOUNT OF WATER PER DAY 0.99 liters

அமெரிக்க ஆக்க மேதை - தாமஸ் ஆல்வா எடிசன்

அமெரிக்க ஆக்க மேதை - தாமஸ் ஆல்வா எடிசன்

சி. ஜெயபாரதன், கனடா

படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!

'எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ' என்று ஒருவர் கேட்டதும், 'படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உணர்வு 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ' என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப் பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கிய மானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவ்ி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான 'ஓம்ஸ் நியதி ' [Ohm 's Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கையளவு! கண்டு பிடித்தது பனையளவு!


'நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ' என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். 'நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ' என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!


மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.


1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளக் [Fort Gratiot Military Post] கார்பென்ட்டராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! 'எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ' என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.


ஏழு வயதில் திடாரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய 'இயற்கைச் சோதனை வேதம் ' [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.


தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .


எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் அகிலப் பதிப்பி ' [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.


முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி ' [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!


எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.


மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல் ' [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி 'நுண்ணுனர் மானி ' [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.


எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.


இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!


1881 ஜனவரியில் முதல் 'விளக்கொளி மின்சார அமைப்பு ' [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார ஏற்பாடு ' [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.


விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் 'எதிர்த்துகள் ' [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எதிர்த்துகள் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு ' [Electronics Industry] அடிகோலியது.


மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் 'பேசும் படம் ' [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ' இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.


1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.


'ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ', என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். 'கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ' என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: 'கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ' 'ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ' என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?


அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்கு களை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு 'விடுதலை விக்கிரகத்தின் ' [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!


***********************
thanks to thinnai.com

வெள்ளி, ஏப்ரல் 10, 2009

பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!

பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!


சாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அள்விற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சாியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும். ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தொிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.


கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூர்யனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிாிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூாிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூாியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பாிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புாிந்து கொள்வீர்கள். ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குாியது. கேம்பிாிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது. மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்றையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது ?


நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகாிக்க அதிகாிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹ 'லியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹ 'லியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவிலிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாாிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.


இவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எாிந்து விடுகின்றன. நமது சூாியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.


இவ்விதமாக எாியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எாிவதற்குாிய எாிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எாிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூாிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் 'வெண் குள்ளர் ' (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூாிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை 'நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூாிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேறப்டி எல்லை சந்திரசேகர் எல்லை ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் பின்னால் நோபல் பாிசும் வழங்கப் பட்டது.


எந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான கார்ல் சுவார்ஸ்சைல்ட் ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூாியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால்சூாியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.


கரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுடியாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தொிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் 'இணை நட்சத்திரங்கள் ' ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான 'சைனஸ் ' நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான ஸ்டாபன் ஹார்கின்ஸ்சின் ஆய்வுகளின்படி மேற்படி 'சைனஸ் ' இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூாிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. சந்திரசேகாின் எல்லையின் படி இந்நட்சத்திரம் இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.


இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபாிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. கரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான 'வெண் துளைக 'ளினையும் எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ' எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காாியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி 'புழுத் துளைகள் ' பிரபஞ்சத்தின் தொலைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ' தப்பும் வேகத்தில் ' ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் 'கரும் ஈர்ப்பு மையங்களி 'னூடான பயணம் சாத்தியாமாகும் பட்சத்தில் மேற்படி 'புழுத் துளைகள் ' மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.


***********************************************************


உசாத்துணை நூல்கள்:


1. Frozen Star By George Greenstein

2. A Brief History of Time By Stephen Hawking

3. One Two Three infinity by George Camow

4. Relatively Speaking by Eric Chaisson

5. Black Holes and Warped Space Time by William J.Kaufmann

6. 'Stephen Hawking : quest for a theory of every thing ' By Kitty Fergusson

thanks to thinnai.com

இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி ?

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

இணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேவையானபொழுது கண்டுபிடிப்பது எப்படி ? இது வைக்கோற்போரில் ஊசி தேடுவதற்கு ஒப்பானது. நாம் கொடுத்து வைத்தவர்களாக இருந்தால் ஒரு சில மணித்துளிகளில் நாம் விரும்பும் தகவல்கள் நமக்குக் கிடைத்துவிடும்; இல்லாவிடிலோ கணினி முன் உட்கார்ந்து, சுட்டியைச் (Mouse) சொடுக்கிச் சொடுக்கி, இணையப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாழ்க்கையே வெறுத்துவிடும். இந்த ஒரு காரணத்திற்காகவே பலர் இணையத்தை நாடுவதைத் தவிர்க்கின்றனர்; பெரும்பாலானவர்களுக்கு இதற்கான நேரம் இருப்பதில்லை, பொறுமையும் இருப்பதில்லை. இதற்காக இணையத்தை அடியோடு ஒதுக்குவது என்பது அறிவுடைமையாகாது. குறிப்பாக ஆய்வாளர்களுக்கு இணைய வெளியும் அதில் கிடைக்கும் தகவல்களும் கற்பனை செய்தும் பார்க்க முடியாதவை. இணையத்தில் சரியான தகவல்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது தகவலறிவு நிர்வாகத்தின் (Knowledge Management) தலையாய பாடமாகும்.


இணையக் கலைச்சொற்கள்


இணையத் துறையில் வழங்கும் கலைச்சொற்கள் தொடக்கத்தில் பொருள் புரியாத வேற்றுமொழிச் சொற்கள் போல இருக்கும் என்பது உண்மையே. ஆனால் தொடர்ந்து இணையத்தில் பணியாற்றுவோர்க்கு கீழ்க்கண்ட இந்த மூன்று சொற்களும் பழக்கப்பட்டுவிடும். அவை முறையே, கோப்பகங்கள் (Directories), தேடுபொறிகள் (Search Engines), துறை வாயில்கள் (Portals) ஆகியன.


கோப்பகங்கள் என்பவை பெரிய அட்டவணைக் (Index) கோப்புகளின் தொகுதியாகும். எடுத்துக்காட்டாக, யாஹூ (Yahoo) என்பது அனைவரும் அறிந்த ஒரு கோப்பகமாகும். ஒரு கோப்பகத்தின் படிநிலை அமைப்பின் வாயிலாக இணையப் பயனாளர் பல்வேறு தகவல்களையும் சில வினாடி நேரத்தில் அடைந்துவிட இயலும். எடுத்துக்காட்டாகத் தமிழ்-- தமிழ் இலக்கியம்-- திருக்குறள்-- திருக்குறள் மாநாடுகள் இவையனைத்தையும் பற்றிய வலைத்தளங்களின் முகவரிகளைச் சில வினாடிகளில் பெற்றிட இயலும். மேலும் எல்லா வலைத் தளங்களும் பதிவு செய்யப்பெற்றவை (கோப்பகங்களில் வலைத்தளத்தை இணைக்க உரிமையாளர்கள் பணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்); இதனால் பொருளற்ற தாறுமாறான கூளத் தளங்கள் (Junk sites) வருவது தவிர்க்கப் படுகின்றது. கோப்பகங்களின் முக்கியமான குறைபாடு என்னவெனில் அவற்றில் இணைக்கப்படும் வலைத் தளங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதில்லை. நாம் தேடும் வலைத்தளம், உரிமையாளர் அதற்கு வழங்கிய முதன்மைச்சொல் (Key word) மற்றும் விவரங்கள் ஆகியவற்றோடு ஒத்துப் போக வேண்டும். அவ்வாறில்லையெனில் நாம் தேடும் தகவல்களை உள்ளடக்கிய வலைத்தளத்தைப் பெறுவது எளிதாக இராது.

தேடு பொறிகள் என்பன, வைய விரிவு வலையில் (World Wide Web – WWW) உள்ள எல்லாத் தளங்களையும் வருடிப் (Scan) பார்த்து நுண்ணாய்வு செய்யும் திறன் வாய்ந்தவை; நாம் தரும் முதன்மைச் சொல்லின் வாயிலாக நமக்குத் தேவையான தகவல்களைப் பட்டியலிடும் கணினி நிரல்களின் (Programs) அடிப்படையில் செயல் படுபவை. கூகுல் (Google), லைகாஸ் (Lycos), எக்சைட் (Excite) ஆகியன தேடுபொறிகளுக்கான சில எடுத்துக் காட்டுகளாகும். இவைபற்றி நாம் கருத்தில் கொள்ளவேண்டிய இரு செய்திகள்: 1) ஒவ்வொரு தேடுபொறியும் வலைத் தளங்களைப் பட்டியலிடுவதற்கும், வகைப் படுத்துவதற்கும் தனித்தனி முறையைக் கையாளும். 2) நாம் தரும் முதன்மைச் சொல்லைக்கொண்டு எந்த ஒரு தேடுபொறியும் வலைத்தளத்தில் கிடைக்கும் தொடர்புள்ள அனைத்து வலைப்பக்கங்களையும் பட்டியலிட்டுவிடாது. வலைப்பக்கங்களை பட்டியலிடுவதும், பட்டியலிடாததும் தேடுபொறிகளின் கட்டுப்படாத விதிமுறைகளுக்கு உட்பட்டவை. எனவே ஒரே முதன்மைச் சொல்லிற்கு, வெவ்வேறு தேடுபொறிகள் வெவ்வேறு வலைப் பக்கங்களைப் பட்டியலிடும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே ஒரே முதன்மைச் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தேடுபொறிகளில் வலைப் பக்கங்களைக் கொணர்ந்து, தகுதியானதைப் பார்வையிடுவதே நல்ல பலனையளிக்கும்.


துறைவாயில் என்பதும் ஒருவகைத் தளம்தான். இத்தளத்தில், கோப்பகங்கள் மற்றும் தேடுபொறிகளில் கிடைக்கும் வசதிகளுடன் கூடுதலாக மின்மடல் (E-Mail), செய்திகள், அரட்டை அறைகள் (Chat rooms) ஆகிய வசதிகளும் உண்டு. யாஹூ (Yahoo), எம் எஸ் என் (MSN) ஆகிய துறைவாயில்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களுக்கான நுழைவாயில்களாக விளங்குபவை. சில துறைவாயில்கள் பரந்து விரிந்தவை; வேறு சில குறிப்பிட்ட துறைகளுக்கான வாயில்களாக மட்டுமே விளங்குபவை. எடுத்துக்காட்டாக தொடர் வளர்ச்சிக்கான நுழைவாயில் (Sustainable Development Gateway – SD Gateway) பெயருக்கேற்றாற்போல் வளர்ச்சித் துறை சார்ந்த தகவல்களையே தருவது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில், தேவையான தகவல்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட துறை சார்ந்த துறைவாயில்கள், கோப்பகங்கள் போன்று பயன்படும்.


கோப்பகம், தேடுபொறி, துறைவாயில் இவற்றுள் எதைப் பயன்படுத்துவது என்பது பயனாளர்களின் விருப்பத்தையும், முன்னுரிமையையும் பொறுத்தது. தற்போது பல தேடுபொறிகள், கோப்பகம் மற்றும் துறை வாயில் ஆகியவற்றின் கலப்பினத் தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன. சிலர் தேடுபொறிகளையும், மற்றவர்கள் மூன்றையும் நம்புகின்றனர். பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஒரு பொதுத் தலைப்பில் தகவல்களை வேண்டுவோர், எங்கிருந்து துவங்குவது என்று தெரியாத நிலையில், கோப்பகம் அல்லது துறைவாயிலை நாடலாம். குறிப்பிட்ட முதன்மைச் சொற்களை அறிந்தோர் அல்லது சீர் வளத் தகவல் காட்டியைக் (Uniform Resource Locator–URL) காண விரும்புபவர் தேடுபொறியைப் பயன்படுத்துவது நல்லது.


முதன்மைச் சொற்களின் (Key words) முக்கியத்துவம்


தேடுபொறியைப் பயன்படுத்த விரும்புவோர் சரியான முதன்மைச் சொற்களை வழங்க வேண்டும். தருகின்ற முதன்மைச் சொற்களின் அடிப்படையில்தான் சரியான தகவல்கள் கிடைக்கும். மேலும் சரியான முதன்மைச் சொற்கள் தேவையற்றக் கூளத்தளங்களைத் தவிர்ப்பதுடன், தேவையான தகவல்களை விரைந்து பெறவும் உதவி செய்யும். பொதுவாக முதன்மைச் சொற்களைத் தரும்போது பெரும்பான்மையோர் ஓரிரண்டு சொற்களோடு நிறுத்திக் கொள்ளுகின்றனர். தேவைக்கேற்றவாறு அதிகமான சொற்களைத் தருவதில் தவறேதுமில்லை. ஏற்கனவே தரப்பட்ட எடுத்துக்காட்டைக் காண்போம். கூகுல் (Google) தேடுபொறியைத் திறந்து, பெட்டியில் தமிழ் (Tamil) என்ற முதன்மைச் சொல்லை தந்தபோது சுமார் 10 லட்சம் முடிவுகள் கிடைத்தன; தமிழ் + இலக்கியம் (Tamil+literature) என்ற முதன்மைச்சொற்களுக்கு கிடைத்த முடிவுகள் சுமார் 50 ஆயிரம்; இன்னும் விளக்கமாக தமிழ் + இலக்கியம் + திருக்குறள் (Tamil + literature + Thirukkural) என்று முதன்மைச் சொற்களைத் தந்தபோது வந்த முடிவுகளின் எண்ணிக்கை வெறும் 250 மட்டுமே; மேலும் விளக்கத்துடன் தமிழ் + இலக்கியம் + திருக்குறள் + மாநாடுகள் என்று முதன்மைச் சொற்களை வழங்கியபோது கிடைத்த முடிவுகள் 30க்குச் சுருங்கிவிட்டன. எனவே நமக்கு என்ன தேவை என்பதை உறுதி செய்துகொண்டு அதற்கேற்ப முதன்மைச்சொற்களை வழங்கினால் தேவையான தகவல்களை விரைந்து பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.


மேலும் சிறப்பாகத் தகவல்களைத் தேடுவதற்கு நேர்த்தியான, நுட்பமான வழிமுறையாக விளங்குவது பூலியன் (Boolean) சொற்களான AND, OR, ANDNOT, NEAR போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும். தமிழ் மற்றும் திருக்குறள் (Tamil AND Thirukkural) என்று முதன்மைச் சொற்களை வழங்கினால் மேற்கூறிய இரு சொற்கள் எங்கெங்கு உள்ளனவோ அத்தள விவரங்களெல்லாம் நம் பார்வைக்கு தரப்படும். தேடுபொறி பற்றிய தளங்களைப் பார்வையிடுவதன் வாயிலாக அவற்றைப் பற்றிய அட்டவணை, தரவேண்டிய ஆணைச் சொற்கள் போன்ற பல விவரங்கள் நமக்குக் கிடைக்கும்; அதை படியெடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான தள விவரம் வருமாறு: http://www.searchenginewatch.com/ facts/atglance.html.


கூழாங்கற்களுக்கிடையே வைரக் கற்கள்


இணையத்தில் வியக்கத்தக்க வகையில், ஏராளமான தகவல்கள் கிடைக்கும் என்பது உண்மையே; ஆனால அவை அனைத்தும் உண்மையென்றோ, சரியானவையென்றோ கூறிவிட முடியாது. இணையத்தில் தகவல்களை அல்லது தகவல் தளங்களைத் தேடிப்பிடித்தவுடன், அடுத்த நமது முக்கியமான பணி அவற்றுள் தேவையான வற்றையும், சரியானவற்றையும் சலித்து எடுப்பதுதான்; இது கூழாங்கற்களுக்கிடையே ஓரிரண்டு வைரக் கல்லைத் தேடுவது அல்லது குப்பையைக் கிளறி மாணிக்கத்தைத் தேடுவது போன்றதே. ஆனால் இதற்கான முடிவை மேற்கொள்ளுவது முழுக்க முழுக்க இணையப் பயனாளரையே சார்ந்தது; ஏனென்றால் நமக்கு வேண்டியது நமக்குத்தான் தெரியும். இருப்பினும் இணையத்தில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சில அறிவுரைகளைக் கருத்தில் கொள்ளுவது நலம்.


நம்பகத்தன்மையும், சரியான தகவலும் முக்கியமெனில், பெயர்பெற்ற, புகழ் வாய்ந்த, பெரிய நிறுவனங்கள்/ அமைப்புகள்/ சங்கங்கள் ஆகியவற்றின் தளங்களைப் பார்வையிடுவது சிறந்தது. எடுத்துக்காட்டாக ஐக்கிய நாடுகள் நிறுவனம், யுனெஸ்கோ போன்றவற்றின் தளங்கள் உண்மைக்கும், சரியான தகவல்களுக்கும் பெயர் பெற்றவை; மேலும் அவற்றின் தளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அண்மைக்காலத் தகவல்களைச் சரியாகவும், துல்லியமாகவும் தரக்கூடியவை. அடுத்து இத்தகையத் தளங்களைப் பார்வையிடும்போது, தொடர்புடைய (Links) வேறு பல சிறந்த தளங்களைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும்.


மேலும் தற்போது பல்துறை சார்ந்த தரம் வாய்ந்த இதழ்களும் இணையத்தில் உலா வருகின்றன; அவையும் அண்மைக்காலத் தகவல்களைச் சரியாகத் தரக்கூடும். அவற்றையும் பார்வையிடலாம். இவை தவிர்த்துப் பல செய்தி நிறுவனங்களும் இணையத் தளங்களை நடத்திவருகின்றன; எடுத்துக்காட்டாக என்விரோலிங்க், தி டைம்ஸ் ஆப் இந்தியா, சி என் என் ஆகியவற்றின் செய்தித் தளங்களை உண்மையான, சரியான, நம்பகமான தகவல்களை வேண்டுவோர் பார்வையிடலாம். மேற்கூறிய தளங்களை, பல தனியார் தளங்களை விட உண்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் உரிய சிறப்பான தளங்களாகக் கருதலாம்.


இருப்பினும் தனியார் தளங்களை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது; மின்னணு இதழ்கள்,

மி-குழுக்கள், மி-மாநாடுகள், மி-கருத்தரங்குகள், நேரடிப் பங்கேற்புகள் ஆகியனவெல்லாம் தனியாரால் நடத்தப் பெறுவனவே. இவற்றிலெல்லாம் பங்கேற்று அண்மைக்கால ஆய்வு முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், பல்வேறு தகவல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடியும். சிறந்த தகவல்தளங்களைப் பற்றிய செய்திகளை கணினி பற்றிய இதழ்களிலும், செய்தித் தாள்களிலும், விளம்பரங்கள் வாயிலாகவும் தெரிந்துகொள்ள இயலும். ஒரே துறையில் ஆர்வமுள்ளவர்களுடன் கலந்துரையாடும்போதும் சிறந்த தகவல் தளங்களைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடும். பெரும்பாலான தளங்களில் அவை எப்போது இறுதியாக மேம்படுத்தப்பட்டவை என்ற தகவல், பக்கத்தின் இறுதியில் தரப்பட்டிருக்கும். இதன்மூலம், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அண்மைக் காலத்தவையா அல்லது ஹைதர் காலத்தவையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முக்கியமானவை எவையெனில், தரப்படும் செய்தியின் உண்மையும், நம்பகத்தன்மையுமே. தகவல் தளங்களில் தரப்படும் செய்திகளின் மூலங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பார்வையிடுவது இவ்வகையில் மிகவும் நல்லது.


தரம்வாய்ந்த, சிறந்த தேடு பொறிகள், உயர் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும், இணையத் தேடுதலில் நமது வெற்றி, நாம் எவ்வளவு சிறப்பாகத் தேடுகிறோம் என்பதை மட்டுமே பொறுத்தது. எவ்வளவு திறமையோடு நாம் தேடுகிறோமோ, அவ்வளவு சிறப்போடு நமது ஆய்வு முடிவுகள அமையும்.


இணையத் தேடலுக்கான சில குறிப்புகள்


1. நமக்குத் தேவையானது, கோப்பகமா, தேடு பொறியா அல்லது துறைவாயிலா என்பதைத் தீர்மானித்தல்.

2. தேடுபொறியைப் பயன்படுத்தினால், சரியான முதன்மைச் சொற்களைக், குழப்பமின்றித் தெரிவு செய்தல்

3. குறிப்பிட்ட முதன்மைச் சொற்களை, வெவ்வேறு தேடுபொறிகளில் தந்து சிறந்த தளங்களைக் காணல்.

4. தேடுபொறி, தளங்களுக்கான பட்டியலைத் தந்தவுடன், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல்.

5. தளத்தைப் பார்வையிடும்போது, தொடர்(Links) தளங்களைப் பற்றி அறிந்து அவற்றையும் பார்வையிடல்.

6. ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதன் மூலத்தை அறிந்து கொள்ளல்.


டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

thanks to thinnai.com

நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)

ரூபர்ட் குட்வின்ஸ்

1896இல் ஹென்றி அண்டோய்ன் பெக்கரெல் அவர்கள் யுரேனியத்தின் சில துகள்கள் ஒளிப்பட தகடுகளை பாதித்து அவைகளை வெளுப்படைய வைக்கின்றன என்று கண்டார். பத்து வருடங்கள் கழித்து ஐன்ஸ்டான் தனது சிறப்பு சார்பியல் கொள்கையை பிரசுரித்து பருமமும், சக்தியும் ஒன்று மற்றொன்றாக மாற வல்லவை என்று நிரூபித்தார்.(E=MCsquared). 40 வருடங்கள் கழித்து ஓப்பன்ஹைமர் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் இணைத்தால் என்ன ஆகும் என்று காண்பித்தார். (ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டு)


ஹிடாச்சி நிறுவனம் தான் கண்டுபிடித்த ஒரு ம்யூ என்னும் ஒரு சில்லை விளம்பரம் செய்வதற்கு காண்பித்த விளம்பரப்படத்தை பார்த்தேன். இது ஒரு மிகச்சிறிய மணல் துகள். அரை மில்லிமீட்டர் இரு பக்கமும். இது காற்றில் ஒரு எண்ணை துப்புவதைத்தவிர வேறொன்றையும் செய்வதில்லை. ஆயினும் இந்த சில்லை இணையத்துடன் இணைத்தால், ஐன்ஸ்டானின் பரும-சக்தி ஒப்புமைபோல, இதற்கும் சமூகத்தையே தலைகீழாக மாற்றிவிடும் வலிமை இருக்கிறது. ஏனெனில் இந்த ம்யூ சில்லு, ஒரு பொருளையும், அந்தப் பொருளைப் பற்றிய அறிவையும் ஒன்றாக இணைத்துவிடுகிறது.


ஒரு அடி பின்னால் எடுத்து வைப்போம். இணையத்தில் அறிவிக்கப்படும் பொருள்கள் உலகத்தில் இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல. நீங்கள் உங்கள் நண்பருக்கு மின் கடிதம் அனுப்பினீர்கள் என்றால் அந்த கடிதத்தைப் படித்தது அவர்தானா என்று தெரியாது. இணையத்தில் ஒருவர் ஒரு பொம்மையை விற்கப் போட்டார் என்றால், உண்மையிலேயே அந்த பொம்மை புகைப்படத்தில் இருக்கும் பொம்மை அவரிடம் இருக்கிறதா என்று தெரியாது. ஒரு பொருளைப்பற்றிய அறிவும் விஷயமும், அந்தப் பொருளும் ஒன்றல்ல. விஷயம் இணையம் வழியாக தண்ணீர் போல ஆள் அடையாளமற்று ஓடுகிறது. இந்த சுதந்திரம்தான் இணையத்தின் சந்தோஷங்களுக்கும், அதில் நடக்கும் பாவங்களுக்கும் காரணம்.


ஆனால் பொருளையும் அதைப்பற்றிய விஷயத்தையும் இணையத்தின் மூலம் இணைத்தால், பொருள்கள் வேறுமாதிரியாகி விடுகின்றன. அதிக விலையுள்ள பொருள்களுக்கும், சிறிய பொருள்களுக்கும், காகிதப்பணத்துக்கும் அடையாளம் இதன் மூலம் கொடுக்கலாம் என்று ஹிடாச்சி நிறுவனம் சொல்கிறது. இந்த மணல் துகள் சில்லு மிகமிக சிறியது, ஒரு காகிதப் பணத்துக்குள் செருகி விடலாம். இது தொடர்ந்து தெரிவிக்கும் எண்ணை ஒரு 30 சென்டி மீட்டர் தொலைவிலிருந்து உடனே அறிந்து கொள்ளலாம்.


இது நடக்கிறது என்று கற்பனை செய்வோம். வங்கிகளிலும், கடைகளிலும் ஒரு காகிதப்பணத்தின் அடையாளத்தை அறிவதற்காக (பொய் காகிதப்பணம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக) உபயோகப்படுத்த ஆரம்பிக்கப்படும். இது கம்பியில்லா தந்தி (வயர்லெஸ்). எனவே அந்த சொந்தக்காரர் அறியாமலேயே நீங்களும் இந்த விஷயத்தை அறிந்து கொள்ளலாம். இது பரவினால், ஒவ்வொரு காரிலும்,ஒவ்வொரு பையிலும், ஓவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு கண்ணாடியிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், அந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும் சில்லுகளிலும், எல்லாவற்றிலும் இந்த சில்லுகள் பொறுத்தப்படலாம். அப்படி பொறுத்தப்பட்டால், உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம்.


இந்த தொழில் நுட்பம் முழுவதுமாக வளர்ந்து பரவினால், உலகமே வெகுவாக மாறிவிடும். அப்படி மாறிய உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது கூட கடினமான விஷயம். ஒரு விஷயத்தின் சொந்தக்காரர் இணையத்தில் தனது பொருள்கள் எங்கே எங்கே இருக்கின்றன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியுமென்றால் நீங்கள் எப்படி திருடுவீர்கள் ? ஒரே அடையாளத்தை வெவ்வேறு பொருள்களுக்கு கொடுக்க முடியாதென்றால், எப்படி ஒரு பொருளுக்கு பதிலாக இன்னொரு பொருளைக் கொடுத்து ஏமாற்றுவீர்கள் ? எல்லா விஷயங்களுக்கும் மத்திய அடையாள எண்களும், அவைகள் என்ன என்ன என்பதற்கு கம்ப்யூட்டர் செய்திமையமும் இருக்கும் என்றால், பொய் எண் வந்ததும், இவை எளிதாக தெரியப்படுத்திவிடும். இந்த மத்திய கணிணி செய்தி மையங்கள் சில நேரங்களில் ஹாக்கர்களால் கெடுக்கப்படலாம். இருப்பினும் எந்தப் பொருளுக்காக செய்தி மையம் கெடுக்கப்பட்டது என்பதை அறியவும், அந்தப் பொருள்களை யார் யார் வைத்திருந்தார்கள் என்பதை அறியவும் முடியுமெனில், குற்றவாளிகள் உடனே தடுத்து நிறுத்தப்படுவார்கள் இல்லையா ?


ஆகவே நாமும் நம் பொருள்களும் ஏன் நம் உலகமே, இணையத்தில் வாழும். இந்த புரட்சிகர மாற்றம் நமது இன்றைய இணையத்தை நேற்றுப் பிறந்த பிள்ளை போல ஆக்கிவிடும். நமது தனித்துவத்தை விடுங்கள், நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் கணிணியிலும், இணையத்திலும் தெளிவாக இருக்கும் என்பது நமது தனித்துவ அக்கறைகளை தூளாக்கிவிடும்.


இது எதிர்காலத்தில் வரும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ? நிறைய காரணங்கள் இருக்கின்றன. இப்போதே நாம் நமது அலுவலகத்துக்குள் வரும்போது பாதுகாப்பு கேமராக்கள் நமது முக பிம்பங்களை அலசுகின்றன. நாம் தெருக்களில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நமது கார் எங்கே போகின்றது என்று தெரிகிறது (ஏற்கெனவே gps global positioning satellite என்னும் துணைக்கோள் கொண்டு ஒரு பொருள் எங்கே இருக்கிறது என்பதை அறிய கருவிகள் விற்கப்படுகின்றன. கார் போன்ற பொருள்களும், சிறிய கணிணிகளுக்கும் இவை பொறுத்தப்பட்டு இவைகள் திருடு போகாமல் தடுக்க உதவுகின்றன) இது போன்று ஒவ்வொரு பொருள்களுக்கும் அடையாளமும் அவை இணையத்தில் பதிவு செய்யப்படுவதும் அரசாங்கத்துக்கும், நமக்கும் உபயோகமானது என்பதை பாருங்கள். உதாரணமாக ஒரு பொருள் எவ்வளவு பணத்துக்கு யாரிடமிருந்து யாருக்குப் போனது என்பதை இணையத்தில் கணக்கிட முடியுமென்றால், மிக எளிதாக அதில் எவ்வளவு பணம் அரசாங்கத்துக்கு வரியாகப் போக வேண்டும் என்பதையும் கணக்கிடலாம். அப்படி கணக்கிட்டு சரியான தொகையை உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுத்து விடலாம். வருடாவருடம் பெரியவேலை செய்து வருமான வரி கணக்கிட்டு அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.


இவைகளைச் செய்ய நமக்கு நிறைய தொழில் நுட்பங்கள் தயாராக்கப் படவேண்டும். ஆனால் எதுவும் யோசிக்க முடியாத விஷயங்கள் அல்ல. இதற்காக எல்லா இடங்களிலும் இருக்கும் ரேடியோ வலையங்கள் வேண்டும். இவைகளை ஏற்கெனவே கட்டிக்கொண்டிருக்கிறோம். மிகச்சிறிய பேட்டரிகள் தேவை. இவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. கோடிகோடிக்கணக்கான பொருள்களை அடையாள எண் கொடுக்கவும், அவைகளைப் பற்றிய விஷயங்களைச் சேகரிக்கவும் நமக்கு பெரிய செய்திமையங்கள் தேவை. அதையும் இன்றைய இணையம் கட்டிக்கொண்டிருக்கிறது.


எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த ரகசியங்கள் இல்லாத புதிய உலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது எப்படி இருக்க வேண்டும், எந்த விதமான சட்ட திட்டங்கள் இங்கு இருக்க வேண்டும், அரசாங்கத்துக்கும் குடிமகனுக்கும் இடையே எந்த விதமான ஒப்பந்தம் இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை சிந்திக்க வேண்டும். முன்பு அரசாங்கத்துக்கும் குடிமகனுக்கும் இடையே இருந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன என்பதை அறிய வெகுதூரம் செல்ல வேண்டாம். ஏற்கெனவே, ஒரு கணிணிக்கும் இன்னொரு கணிணிக்கும் இடையேயான பியர் டு பியர் வலையங்கள் மூலம் இசை கோப்புகள் பரிமாறிக்கொள்வதன்மூலம் பழைய காப்பிரைட் உரிமை சட்டங்கள் காலாவதியாகி விட்டன. எதிர்காலத்தில் வரும் பெரிய வெடிப்புக்கு முன்னர் வரும் சிறிய வெடிப்புகள் தாம் இவை. உலகம் ஒரு உலோகத்துகளின் உள்ளே தொழில் நுட்பத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 50 வருடத்துக்குள் என்னவென்ன நடக்கும் என்பதற்கு நமக்கு கருத்துக்களே கிடையாது (பெக்கரெல் ஹிரோஷிமாவை கற்பனை செய்து பார்த்திருப்பாரா ?) எதிர்காலத்துக்கு வாருங்கள்.

thanks to thinnai.com