திங்கள், செப்டம்பர் 05, 2011

மரணம்



மரணம் என்பது
உல்லாச வாழ்விற்கான
நுழைவுச் சீட்டு

எல்லையற்றப் பெருவெளியில்
ஏகாந்தமாய்
எந்தத் தேவையுமின்றி
வாழப் போகும்
வாழ்கையின்
துவக்கம்


பசியிலிருந்து
பந்தத்திலிருந்து
பாசத்திலிருந்து
பயத்திலிருந்து
விடுபடப் போகும்
விசேச நாள்

சுமையாய் சுமந்த
நினைவுகளை
இறக்கி வைக்கப் போகும்
இனிய நாள்

நான் என்ற பொய்
முகவரியை விட்டு
உண்மை அறியப் போகும்
உன்னத நாள்





புதன், மார்ச் 23, 2011

மறந்து நின்றான்






மனிதன்.
விண்ணில் சென்று
மண்ணில் மீளும்
விண்கலம் படைத்து
மகிழ்ந்து நின்றான்

வானில் ஏறி
வட்ட பூமியை
சுற்றி வந்தே
திட்டமிட்டான்

விண்ணை முட்டும்
கட்டிடம் கட்டி
கர்வ முற்றான்

இரவும் பகலாய்
ஓளிர்ந்து நிற்க
மின்னொளிப் படைத்து
கண்டு மகிழ்ந்தான்

விரலசைவில்
விரைந்து செல்ல
வாகனம் படைத்து
ஓடி மகிழ்ந்தான்

கண்ணசைவில்
இயங்கும் பல
கணினி படைத்து
களிபுற்றான்


எல்லாம் படைத்த
மனிதன் இன்று
படைத்த ஒருவனை
மறந்து நின்றான்

படைத்தவனோ
சில வினாடிகள்
அசைந்து
தன் இருப்பு தன்னை
அறிவித்தான்

கடலின் ஆழத்தில்
உளை வைத்தான்
கற்பனைக் கெட்டா
சேதங்களை
விளைவித்தான்

எல்லாம் மறந்து
மனிதனை
அழ வைத்தான்

பலம் அனைத்தும்
எனக்கே என்று
மீண்டும் மீண்டும்
நிரூபித்தான்.