வியாழன், ஜூன் 11, 2009

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

மனித உடலில் சில சில்லுகளைப் பொறுத்தி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னேரமும் விண்ணில் உள்ள துணைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்க முடியுமா என்று ஒரு அமெரிக்க நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.


அப்ளைடு டிஜிட்டல் சொலுஷன்ஸ் என்ற இந்த நிறுவனம், இந்த கணினிச்சில்லுகளை வெரிசிப்ஸ் என்று அழைக்கிறது. இந்த சில்லுகள் உடலில் தோலுக்கு அடியில் பொறுத்த இயலும்.


ஜிபிஎஸ் என்னும் உலகத்தில் ஒரு பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிய உதவும் துணைக்கோள் தொழில்நுட்பத்தை இதற்கு உபயோகப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே பலர் கோரிவருகிறார்கள்.


தென் அமெரிக்காவில் ஏராளமாக நடக்கும் ஆள்கடத்தல்களால் இந்த தொழில்நுட்பத்துக்கு தேவை பெருகி வருகிறது.


இந்த வெரிசிப் இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்க அரசாங்கம் இதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.


இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிட்டால், இதனை கொண்டு ஒரு ஆள் எங்கே போகிறார் எங்கே வருகிறார் என்பதை அரசாங்கமோ நிறுவனங்களோ கண்காணிக்க எந்த வித தடையும் இராது என்று எதிர்கால கணிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்.


உடலும் தொழில்நுட்பமும் இணைவது நல்லதல்ல என்று பலர் அஞ்சுகிறார்கள். பிரைவசி இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் அதலிவரான சிமோன் டேவிஸ் இது மகிழ்ச்சியானதல்ல என்று கூறுகிறார்.


ஏற்கெனவே பல உடல் சார்ந்த சில்லுகள் சந்தைக்கு வந்துவிட்டன. ரத்தத்தின் வேதிப்பொருட்களை கணக்கிடும் சில்லு, எந்த வேதிப்பொருள் குறைகிறது என்று ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல மருந்தை தானாக அனுப்புமாறு சில சில்லுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. (உதாரணமாக, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு குளுக்கோஸ் பரிசோதனைச் சில்லு). இதே போல, கால் விளங்காதவர்களின் காலை செயல்படுத்த, மூளையிலிருந்து வரும் செய்தியைப் படித்து காலுக்கு அனுப்பும் சில்லுகளும் இருக்கின்றன.


இதில் அடுத்த படி, ஒருவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும், அவரின் சிந்தனைகளை படித்து செய்தியாக இன்னொருவருக்கு அனுப்புவதும்.

வியாழன், ஜூன் 04, 2009

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி


நேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.


நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச் சாலையில் உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், மிகச்சிறிய பனிக்கட்டி துகள்கள் உருவாவதையும் அது அல்ட்ரா வயலட் கதிர்களினால் தூண்டப்பட்டு உயிர்களுக்குத் தேவையான முக்கியமான வேதிவினைகளை நடத்துவதையும் காண்பித்திருக்கிறார்கள்.


இந்த பரிசோதனைகளில், அணுக்கள் அமினோ அமிலங்களாக கோர்த்தன. இவை புரோட்டான்களின் அடிப்படைப் பொருட்கள். இவைகளே உயிர்கள் மேலே மேலே கட்ட உதவும் அடிப்படைப் பொருள்கள்.


இப்படிப்பட்ட மேகங்களில் தோன்றிய அடிப்படைப் பொருட்கள் நம் சூரிய மண்டலம் உருவானபோது அங்கங்கு சிதறி பூமியிலும் விழுந்து பூமியில் உயிர்கள் தோன்ற காரணமாயிருக்கலாம்.


நம் பூமியில் உயிர்கள் வருவதற்கு வந்த வழி பல மெட்டியோரைட்டுகள் எனப்படும் வான்கற்கள் என்பதற்கு பல தடயங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஆனால், அறிவியலாளர்கள், எப்படி மெட்டியோரைட்களான வான்கற்களில் உயிர்களுக்கான அடிப்படைப் பொருட்கள் வந்தன என்பதை ஆராய விரும்பினார்கள்.


இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழியில், தண்ணீர் சேர்ந்த சிக்கலான வேதிவினைகள் நம் சூரியமண்டலம் ஆரம்பிக்கும் போது அதன் கடினமான கற்களில் நடந்திருக்கலாம்.


இப்படிப்பட்ட வேதிவினைகள் பலவிதமான அமினோ அமிலங்களை உருவாக்கின. உதாரணமாக, முர்சிஸான் விண்கல்லில் சுமார் 70 சதவீத அமினோ அமிலங்கள் இருந்தன.


இரண்டு தனித்தனி குழுக்கள், ஒன்று மேக்ஸ் பெர்ன்ஸ்டைன் தலைமை தாங்கிய Seti குழு, இரண்டாவது ப்ரெமன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யுவே மெர்ஹென்ரிஷ் Uwe Meierhenrich குழு, வேறொரு வழியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.


நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியில் இருக்கும் மிகச்சிறிய பனித்துகள்களின் மீது நடக்கும் வேதிவினைகள் சம்பந்தப்பட்டது இந்த வழி.


இந்த ஆராய்ச்சியாளர்கள், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியையும் அதில் இருக்கும் சுற்றுச்சூழலையும் பரிசோதனைச்சாலையில் உருவாக்கினார்கள். அல்ட்ரா வயலட் கதிரியக்கமும், -258 டிகிரி தட்பவெப்பமும் (சைபர் டிகிரிக்கு 15 டிகிரி அதிகம்) இந்த பரிசோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டன.இந்த சூழ்நிலைகள், அண்ட வெளியில் திரியும் கார்பன் மோனோக்ஸைட், அம்மோனியா போன்ற மூலக்கூறுகளை இணைத்துக்கொண்டு வேதிவினைகளை உருவாக்கின.


இரண்டு குழுக்களுமே, அமினோ அமிலங்கள் உருவாக்கத்தையும், கிளைசின், அலனைன், செரைன், ப்ரோலைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் உருவானதையும் குறிப்பிட்டுள்ளன.


இந்த பரிசோதனைகள் ஒரே மாதிரி நிகழ்த்தபடவில்லை. ஒரு குழு தண்ணீர் அதிகமான சூழலை உருவாக்கிக்கொண்டது. மற்றொன்று தண்ணீர் குறைவாக பரிசோதனை நடத்தியது. தண்ணீர் குறைவான பரிசோதனை, அதிகமான அமினோ அமிலங்களை உருவாக்கியது.


இந்த பரிசோதனைகள் போல நடக்கும் பல பரிசோதனைகள், அகிலத்தில் பல வேறுவிதமான சூழ்நிலைகளில் பல சிக்கலான மூலக்கூறுகள் தோன்றுவதன் தடயங்களை உறுதி செய்கின்றன. இது அண்டவெளியெங்கும் உயிர்கள் இருக்கின்றன என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன


thanks to thinnai.com

அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது

அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது


எதிர்கால போர்வீரன், பெரும் கட்டடங்களை எளிதில் தாண்டக்கூடியவனாக்வும், தன்னுடைய புண்களைதானே குணப்படுத்திக்கொள்பவனாகவும், எதிரே வரும் துப்பாக்கிக் குண்டுகளின் பாதையிலிருந்து எளிதில் விலகிக்கொள்பவனாகவும், நினைத்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் ஆகும் திறமை படைத்தவனாக இருப்பான்.


இதெல்லாம் அமெரிக்க ராணுவம் தன்னுடைய எதிர்கால இயந்திர போர்வீரனுக்குத் தேவையான குணங்கள் எனப் பட்டியல் போட்டு, இவைகளைச் செய்ய மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு கொடுத்திருக்கும் திட்டங்கள்.


50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு உருவாகும் மையம் Institute for Soldier Nanotechnologies (ISN). என்று அழைக்கப்படும்.


இந்த அமைப்புக்கு இருக்கும் குறிக்கோள்கள் பல. போர்வீரனை கண்ணுக்குத் தெரியாதவனாக ஆக்கும் உடைகள். போர்வீரனது கால்கள் உடைந்துவிட்டால், உடை உடனேயே கால் உடைந்தால் போடும் கட்டுபோல இறுகும் துணி ஆகியவை.


வெற்றிகொள்ள முடியாத நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் இவ்வாறு எதிரே வரும்போது எதிராளியின் மனத்தில் எப்படிப்பட்ட மனநிலையை தோற்றுவிக்க முடியும் என சிந்தித்துப்பாருங்கள்.


உடலின் மேல் நண்டுகளுக்கு இருப்பதுபோன்ற வெளிப்புற எலும்புக்கூட்டையும் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது. இது எந்த துப்பாக்கிக் குண்டுகளையும் தாங்கும். இது தகுந்த நேரத்தில் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம்.


செருப்புகளில் சக்தியோடு கூடிய ஆயுதங்களை வைத்து, எளிதாக வெகு தூரம் ஓடவும், அமானுஷ்ய சக்தியை கொண்டு எதிராளியைத் தாக்கவும் இவை பயன்படும்.


பழங்கால சங்கிலி சட்டை போல, நவீன மூலக்கூறு அறிவியலின் துணையோடு நவீன கவசத்தை இந்த மையம் உருவாக்க இருக்கிறது.


இப்படிப்பட்ட எதிர்கால போர்வீரன், தன்னை எளிதில் காப்பாற்றிக்கொள்வது மட்டுமல்ல, எதிராளிக்கு மிகுந்த ஆபத்தையும் விளைவிப்பான் என்று கூறுகிறா ஐ.எஸ்.என் பேராசிரிய நெட் தாமஸ்.


ஐ.எஸ்.என் மையத்தில் சுமார் 150 பேர்கள் வேலை செய்வார்கள். 35 எம்.ஐ.டி பேராசிரியர்கள், 80 முதுகலை மாணவர்கள், இன்னும் ராணுவத்தின் முக்கிய நிபுணர்கள் ஆகியோர்.ஆராய்ச்சி 6 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும்

*எதிராளியின் ஆயுதத்தை அடையாளப்படுத்துதல்

*ஆயுதத்துக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குதல், (புல்லட் புரூஃப் உடையாக உடை மாறுவது)

*கண்ணுக்கு தெரியாமல் மறைதல்

*அதிக சக்தியுடன் போர்வீரன் செயலாற்ற உதவுதல்

*காயம்பட்டதும் அங்கேயே அப்போதே நிவாரணம் வழங்குதல்

*போர்வீரன் எடுத்துச்செல்லும் எடை 45 பவுண்டுகள் என ஆக்குதல்,( இன்று சுமார் 145 பவுண்டு எடையை தூக்கிக்கொண்டு ஒரு ராணுவ வீரன் நடக்கிறான்)


ஏற்கெனவே எம்.ஐ.டி முன்பு ராணுவத்துக்கு பலவகையில் போர்க்காலங்களில் உதவி வந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது, எதிரே வரும் விமானங்களைக் கண்டுபிடிக்க ராடார் அமைப்பை இதுதான் உருவாக்கியது.

பனிப்போரின் போது, ராக்கெட் குண்டுகளான மிஸ்ஸைல்ஸ்களுக்கு வழிகாட்டும் அமைப்புக்களை உருவாக்கித்தந்தது.

எம்.ஐடியில் இப்போது உருவாக்கப்படும் பல விஷயங்கள் இன்னும் பத்தாண்டுகளுக்கு வெளியே வராது.thanks to thinnai.com