புதன், செப்டம்பர் 30, 2009

நலமுடன் வாழ


நலமுடன் வாழ

மூளை மனிதனை முழுவதும் கட்டுபடுத்துகிறது. ஓவ்வொரு உறுப்புக்கும் மூளையிலிருந்தே கட்டளைகள் செல்கின்றன. மூளை சரியாக செயல் படவிட்டால் உடல் உறுப்புகளும் செயல் இழந்து விடும். அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து விடுகின்றன.

எனவே மூளை சோர்வாகவோ, அதிக உழைப்புக்கோ ஆட்பட்டு இருந்தால் நம்மால் மலர்ச்சியாக இருக்க முடியாது ஆகையால் இத்தகைய சிறப்புமிக்க மூளையை நாம் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

மூளையை பாதிக்கும் சில விசயங்களை தொகுத்து தந்திருக்கிறேன்

1.காலை உணவு – Break Fast

காலை உணவு உண்ணாதவர்களின் இரத்ததில் சர்கரையின் அளவு குறைகிறது இதனால் மூளைக்குத் தேவையா சத்துப் பொருட்களை கொண்டு செல்வதில் பற்றாக்குறை ஏற்படுகிறது, மூளையின் இயங்கு திறன் குறைகிறது.

2. அதிகமாக உண்ணுதல் - Over Eating

இது மூளைக்கு இரத்தம் செல்வதை கடினப் படுத்துகிறது இதனால் மூளைத்திறன் குறைகிறது.

3. புகைத்தல் - Smoking
இது அதிக மூளை சுருக்கங்களை உண்டு பண்ணுகிறது இதனால் Alzheimer என்ற நோய் உண்டாகிறது

4. அதிக சர்கரை உண்ணுதல் - High Sugar consumption

அதிக அளவு சர்கரை உண்பது இரத்ததிலிருந்து Protein களையும் Neutrien களையும் மூளை பெறுவதில் தடை ஏற்படுகிறது.

5. சுத்தமற்றக் காற்று – Air polution

நம் உடலிலேயே அதிகம் Oxygen உட்கொள்வது நமது மூளையாகும் சுத்தமற்ற காற்று மூளையின் திறனைக் குறைக்கிறது.

6. தூக்கமின்மை – Sleep deprivation

நாம் நன்றாக தூங்கும் போதுதான் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது, மிகக் குறைவான தூக்கம் மூளையின் செல்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கிறது.

7. தூங்கும் போது தலையை மூழுவதும் மூடுதல் - Head covering while sleeping
தலையை சுற்றி துணியை சுற்றிக் கொண்டு தூங்கும் போது corbon dyoxide அதிகமாகவும் oxygen குறையவும் செய்கிறது இது மூளையை பாதிக்கிறது எழும் போது சோர்வு ஏற்படுகிறது.

8. உடற்சுகமின்றி இருக்கும் போது மூளைக்கு வேலைக் கொடுத்தல் - Working your brain while your illness

uடல் நலமில்லாத நேரங்களில் மூளைக்கு ஓய்வு கொடுப்பது நல்லது இல்லையேல் மூளையை பலஹினப்படுத்தும்

9. நல்ல எண்ணங்களை எண்ணாமை – Lacking in stimlating thoughts

தொடர்சியான நல்ல எண்ணங்கள், தியானம் போன்றவை மூளையை மலாச்சியா வைத்திருக்க உதவும் நல்ல எண்ணங்களின் குறைபாடு மூளையை இறுக்கப் படுத்துகிறது.

10. குறைவாக பேசுதல் - Rarely talking

குறைவாகப் பேசுதல் மூளைத்திறனை அதிகப் படுத்தும் - Intellectual conversation will promote the efficiency of the brain

நல்லதையே எண்ணுவோம் நல வாழ்வு வாழ்வோம்

ஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்

ஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்
1945 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் ஜப்பானின் நகரங்களாகிய ஹிரோசிமா நாகசாகியில் இடப்பட்ட லிட்டில் பாய் அணட் ஃபாட் பாய் என்ற அணுக் குண்டு வீச்சுக்கு பின் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர் 70 வருடங்களுக்கு புல் பூண்டு முளைக்காது என்று சொல்லப் பட்ட இரு நகரங்களின் இன்றய வளாச்சி உலகமே அதிசயக்கும் படி உள்ளது.
ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் இது முன்னுதரானமாகும்.
சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாம் அடைந்த முன்னேற்றம் என்ன ஓவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விசயம் குறிப்பாக அரசியல் வாதிகள், அவர்களின் சாதனையாக சுவிஸ் பாங்கில் மறைத்து வைத்திருக்கும் பணத்தைச் சொல்லலாம்.செவ்வாய், செப்டம்பர் 29, 2009

புகை பிடிக்கும் குழந்தை

புகை பிடிக்கும் குழந்தை
குழந்தைகள் எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தை தான், அவர்களுக்கு பெற்றோர் தான் முன் மாதிரி, இதை பெரும்பாலன பெற்றோர்கள் உணர்வதில்லை, சிறு குழந்தைகள் முன்பாகவே புகைத்தல், குடித்தல் போன்ற விரும்பதாகத காரியங்களில் ஈடுபடுகிறோம் அது குழந்தைகள் மனதை வெகுவாக பாதிக்கிறது.


பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்து பார்பவர்கள் தான் குழற்தைகள். குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர பெற்றோர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும்

குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான் ஆகையால் குழந்தைகள் முன்பு தவறான வார்த்தைகள் உபயோகப்படுத்தல், கணவன் மனைவி சண்டை போன்றவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திங்கள், செப்டம்பர் 28, 2009

ASTRONOMY IN THE LIGHT OF AL QURONசூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.


சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)
இந் அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)
பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.


கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.
பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

புஉமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.
ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -


“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)

ஞானி
உடலையும் உள்ளத்தையும் தாண்டி
உயிரை உரசிப் பார்ப்பவன் ஞானி

உயிருக்குள் இறங்கி
முத்துக் குளிப்பவன் ஞானி

புறங்களின் போர்வையை
நீக்கிப் பார்பவன் ஞானி

அகம் புறம் இரண்டிலும்
விக்ரக நிக்ரகம் செய்தவன் ஞானி

ஆதி முதலாய் எதுவும் பாதி
இல்லை என்பதை ஓதி உணர்ந்தவன் ஞானி

இருப்பதற்கும் இல்லாமைக்கும்
இடைவெளி இல்லை என்பதை
அறிந்து கொண்டவன் ஞானி

ஞானம் என்பதை காட்டுக்குள்
தேடாமல் உடற் கூட்டுக்குள்
தேடுபவன் ஞானி

உள்ளுகுள் ஒளிந்திருக்கும்
சத்துக்குள் சம்பாசிப்பவன் ஞானி

ஞானம் என்பது இறைவன்
கொடுக்கும் தானம்

அதைப் பெற்றவன் உள்ளம்
எல்லை இல்லா வானம்

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சிங்கார துபை


சிங்கார துபை

சிங்கார துபையின் அழகுக்கு அழகு சேர்க்க, துபை மெட்ரோ ரயிலின் இயக்கம் தொடங்கி விட்டது. முதன் முதலாக முழுவதும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில் தொடங்கப் பட்டுள்ளது.இதன் நிலையங்கள் முழுவதும் ஏர் கண்டிசன் செய்யப் பட்டுள்ளது, ரயில் வந்து நின்றதும் ரயிலின் கதவும் பிளாட்பாரக் கதவும் சேர்ந்து திறப்பது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
துபை அரசு, 2010 ல் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலை பயன் படுத்துவார்கள் என்று எதிர் பார்கிறது. மேலும் இது தற்போதைய வாகன நெரிசல்களை குறைப்பதோடு, நகரின் முக்கிய இடங்களை இணைக்கிறது.
2005 ல் தொடங்கப்பட்டு 2009 ல் முடிக்கப்பட்ட (இன்னும் பணிகள் முடியவில்லை) இந்த மெட்ரோ ரயில் 12.45 மில்லியன் திர்ஹமில் தொடங்கப்பட்டு 28 மில்லியன் திhஹம் செலவை இது வரை எட்டியுள்ளது.
இதை ஜப்பானியக் கம்பெனிகளான மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரி, மிட்சுபிஸி கார்பரேசன், ஓபாயாசி கார்பரேசன், கஜிமா கார்பரேசன் துருக்கி நாட்டு யாப்பி மர்கசி, ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்தன.
இதன் ரெட் லைன் எனப்டும் டிராக்கின் தூரம் 35 கீமி ராசிதியா முதல் ஜபல் அலி வரை, (இது தொடங்கப் பட்டு விட்டது) கிரின் லைன் எனப்படும் டிராக் அல் கிஸ்ஸஸ் முதல் அல் ஜத்தாஃப் வரை, இது 2010 மாhச்சில் தொடங்படும். மொத்தம் 70 கிமி நீளத்தில் 47 நிலையங்களுடன் இதில் 9 நிலையங்கள் அண்டர் கிரவுண்ட் உள்ளது.
இதில் ஒரு நாளைக்கு 27000 ம் பயணிகள் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது இதன் வேகம் மணிக்கு 40 – 45 கிமி இருக்கும். ஜப்பானிய நிறுவனமான கிங்கி சரயவோ 87 பெட்டிகளை செய்து கொடுத்துள்ளது.இதன் சிக்கனல் முழுவதும் தானியங்கி முறையில் அமைக்கப் பட்டுள்ளது அலுவலக கூட்டம் இல்லாத நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும், கூட்டம் உள்ள நேரங்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறையும ரயில் நிலையத்திற்கு வரும்.கார் நிறுத்தும் வசதிகளும் எதிர்காலத்தில் செய்து தரப்படும், ராசிதியா நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்த வசதியும், ஜிமைரா ஐலண்ட் நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்தும் வசதியும், அல் கிஸ்ஸஸ் நிலையத்தில் 6000 கார் நிறுத்தும் வசதியும் செய்துக் கொடு;க்கப் படும்.இது அமிரக மக்களுக்கு சிறந்த வரபிரசாதமாகும்.

ராஜா கமால்
துபை

நீண்ட நாள் வாழ் நிறைய வழிகள்
நீண்ட நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!

என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம். சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்!

1.நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணிநேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.

2.நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.

3.உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!

4.நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக்,ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளைத் த்ரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

5.உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களைவிட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.

6.மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!

7.முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!

8.100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

9.ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!

10.நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.

11.தாய்தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!

12.உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!

13.பச்சைத் தேயிலைட்ட்டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!

14.ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!

15.நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!

நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

எத்தனைநித்தம் பிறப்பெடுத்து
பிறவிப் பெருங்கடல்
நீந்துவோர் தான்
எத்தனை

சித்தம் தெளிந்து
சீர் கரை
சேருவோர் தான்
எத்தனை

வாழ்கை கடலினில்
வசதிக் கரை நோக்கி
நீந்துவோர் தான்
எத்தனை

அதை வாழ்கை
முடியுமுன்னே
வாய்க்கப்
பெற்றவர் தான்
எத்தனை


உலகம் என்ற
உருண்டைக்குள்ளே
மனிதன் அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

பசித்த வயிற்றுக்கு
உணவை சேர்க்க
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

பொய்மையிலிருந்து
உண்மைக்கு அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

இருட்டில் இருந்து
வெளிச்சத்திற்கு
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

தீமையிலிருந்து
நன்மைக்கு
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

இதயக் கடலில்
எண்ணங்களுடன்
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

பிறந்தது முதல்
இறக்கும் வரை
வாழ்வதற்கே
நாம் அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

இதில் நீந்தி
கரை சேர்ந்தோர் தான்
எத்தனை

ராஜா கமால்
துபை

செவ்வாய், செப்டம்பர் 22, 2009

கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்

கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்

காற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால் இயங்கும் டர்பைன்களை உருவாக்கி வருகிறார். இவை கடல்தண்ணீரை மிகச்சிறியதுளிகளாக மாற்று காற்றில் தெளிக்கின்றன. இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது மழையை உருவாக்குகிறது. 'இது வேலை செய்தால், இதன் பயன் மிகவும் அதிகமாக இருக்கும். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதிலிருந்து பாலைவனத்தை பசுமையாக்கும் வரை இதனை உபயோகப்படுத்தலாம் ' என்று ஸால்டர் கூறுகிறார்.


இந்த டர்பைன்கள் கட்டுமரம் போன்ற படகுகளில் ஏற்றப்பட்டு உலகத்தின் மிகவும் காய்ந்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மழை உருவாக்குவதை அதிகரிக்கலாம்.


இந்த ஐடியாவில் ஏதும் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று இந்த பொறியியல் பேராசிரியர் தெரிவிக்கிறார்.டர்பைன் சுழற்றுவான்களின் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் திவாலைகள் காற்றில் கலந்து டர்பைன் பின்னால் செல்லலாம். உபரி உப்பு கடலுக்குள் விழுந்துவிடும். ஈரப்பதம் ஏறிய காற்று நிலத்துக்குச் சென்று தாக்கும்போது மழை தோன்றும்.


இது பல உபரி தேவைகளைக் கொண்டிருக்கிறது. காற்று கடலிலிருந்து கடற்கரை நோக்கி அடிக்கவேண்டும். காற்று ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சூடாகவும், நிலத்தை சேரும்போது அது நிலத்திலிருந்து மிக உயரத்துக்கு மேகம் அளவுக்குச் செல்லவேண்டும்.


கணினி மாதிரிகளைக் கொண்டு இந்த கருத்தை பரிசோதிப்பதாகவும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.


'ஈரப்பதம் ஏற்றப்பட்ட காற்று எங்கு செல்லும் என்று நமக்குத் தெரியாது. இது தட்பவெப்பம் குறித்த மிகவும் கடினமான கேள்வி. அதற்காக நாங்கள் கணினி மாதிரியை உபயோகப்படுத்துகிறோம் ' என்று கூறினார்.


மாதிரி வெற்றிகரமாக இருந்தால், இதனைக்கொண்டு ஒரு உண்மை நிலவரப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.


ஆனால் எல்லோரும் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.பாலைவனங்கள் பாலைவனங்கள்தாம். ஏனெனில் இந்த நிலங்களில் இருக்கும் காற்று இறங்குகிறது. இறங்கும் காற்றின் மூலம் மழை வராது. எவ்வளவுதான் அவற்றுக்குள் ஈரப்பதம் ஏற்றினாலும், இறங்குமுகமான காற்றின் மூலம் மழை வராது ' என்று தட்பவெப்பவியலாளரும், டெலிகிராப் பத்திரிக்கை நிருபருமான பிலிப் ஈடன் கூறுகிறார்.


இந்த பரிசோதனையை 15 மாதங்கள் நடத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பயன் இதனை சந்தேகப்படுபவர்களின் இழப்பைவிட அதிகம் என்றும் ஸால்டர் கூறுகிறார்.

டி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் ?(TC)

டி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் ?(TC)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுண்செயலிகளின் (microprocessors) விரைவுத்தன்மை வளர்ந்து கொண்டே போகிறது; அதற்கேற்ப சில்லுத் (chip) தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சில்லுகளைத் தயாரித்து வருகின்றனர். தற்போது சில்லுத் தயாரிப்புக்குச் சிலிகானைப் (silicon) பயன்படுத்துவோர், கணினி வேகத்தைக் கூட்டுவதற்கு விரைவில் வேறு பொருளைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அடுத்த தலைமுறை நுண்செயலிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருள் வேறெங்குமில்லை; ஆயிரமாயிரம் மீக்கணினிகளின் (super computers) விரைவுத்தன்மைக்கு இணையான ஆற்றல் கொண்ட நுண்செயலிச் சில்லுகள், மனித உடல் உட்பட வாழும் உயிரினங்களின் உடலிலேயே அடங்கியுள்ளன. நமது மரபணுக்களை (genes) உற்பத்தி செய்வதற்குக் காரணமான டி.என்.ஏ. (Deoxyribonucleic acid – DNA) மூலக்கூறுகளில், உலகின் மிக விரைவான மீக்கணினிகளின் செயல்பாட்டைப் போல் பன்மடங்கு விரைவுத் தன்மையுடன் செயல்படும் ஆற்றல் அடங்கியுள்ளது. டி.என்.ஏ.வினால் உருவாக்கப்படும் கணினிச் சில்லுகளை, சிக்கலான கணக்கீடுகளைச் செய்ய ஏற்கனவே பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். தற்போதைய கணினிகளில் உயர்ந்த அளவாகச் சேமிக்கப்படும் தரவுகளைப் (data) போல் பல கோடி மடங்கு தரவுகளைச் சேமிக்கும் டி.என்.ஏ. கணினிகள் உருவாக இருக்கின்றன. வருகின்ற பத்தாண்டுகளில், மரபணுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படவுள்ள கனினிகள், தற்போதைய சிலிகான் கணினிகளைப் புறந்தள்ளிவிடும் என்பது உண்மை.


வளர்ந்துவரும் தொழில்நுட்பம்

டி.என்.ஏ. கனினிகள் தற்போது சந்தைக்கு வரவில்லை என்பது உண்மையே; இதன் தொழில்நுட்பம் இப்போதுதான் வளர்ந்து வருகிறது; இத்தொழில்நுட்பத்திற்கு வயது பத்தாண்டு கூட ஆகவில்லை. 1994 ஆம் ஆண்டு லியோனார்ட் அடெல்மன் (Leonard Adelman) டி.என்.ஏ.வைக் கொண்டு சிக்கலான கணக்குகளுக்கு விடை காணும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் வல்லுநராகப் பணியாற்றும் அடெல்மன் அவர்கள், ஜேம்ஸ் வாட்சன் (James Watson) எழுதிய 'மரபணுவின் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology of the Gene) ' என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அந்நூலைக் கற்றபின் டி.என்.ஏ.வுக்கு கணக்கிடும் ஆற்றல் உண்டு என்ற முடிவுக்கு வந்தார். உண்மையில் கணினியின் வன்வட்டு இயக்கி (Hard drive) போன்றே டி.என்.ஏ. வும் நமது மரபணுக்களைப் பற்றிய தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாகும்.விற்பனையாளர் பயணப் பிரச்சினை (Traveling Salesman Problem)

அடெல்மன் அவர்கள்தான் டி.என்.ஏ. கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1994 ஆம் ஆண்டு அறிவியல் இதழில், ஒரு கணக்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க டி.என்.ஏ. கனினியை எவ்வாறு பயன்படுத்தலாம் என அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அப்பிரச்சினை விற்பனையாளர் பயணப் பிரச்சினை என்பதாகும். இப்பிரச்சினையின் நோக்கம் என்னவென்றால் பல நகரங்களில் பயணம் செய்ய வேண்டிய ஒருவர் எவ்வளவு குறைவாகப் பயணம் செய்து எல்லா நகரங்களுக்கும் ஒரு முறை சென்றுவர இயலும் என்பதைக் கண்டறிவதாகும். நகரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பிரச்சினையின் சிக்கலும் அதிகமாகும். அடெல்மன் ஏழு நகரங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான குறைந்த அளவு தூரத்தைக் கணக்கிடுவதற்கு முயன்றார்.


இக்கணக்கீட்டில் அடெல்மன் பெற்ற வெற்றி, டி.என்.ஏ. கணினியைச் சிக்கலான கணக்கீடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. ஆனால் அவரது டி.என்.ஏ. கணினியின் விரைவுத்தன்மை சிலிகான் கணினியின் வேகத்தோடு போட்டியிட இயலவில்லை என்பது உண்மையே. மேலும் அந்த டி.என்.ஏ. கணினிக்கு மனித உதவியும் தேவைப்பட்டது; தானியங்கியாகப் பணியாற்ற இயலவில்லை. மனித உதவியின்றி தனித்தியங்கக்கூடிய ஆற்றலுடன் டி.என்.ஏ. கணினியினை வடிவமைக்க வேண்டியிருந்தது.


ஏரண வாயில்கள் (Logic gates)

அடெல்மனின் ஆய்வு நடைபெற்ற மூன்றாண்டுகளுக்குப்பின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக (University of Rochester) ஆய்வாளர்கள் டி.என்.ஏ.வினாலான ஏரண வாயிலகளை உருவாக்கினர். நாம் ஆணையிடும் செயல்களைக் கணினி நிரைவேற்றுவதற்கு ஏரண வாயில்கள் இன்றியமையாதவை. இவ்வாயில்களே இருமக் குறியீடுகளைத் (binary codes) தொடர் சமிக்கைகளாக (signals) மாற்றிக் கணினியில் செயற்பாடுகளை நிறைவேற்றப் பயன்படுபவை. தற்போதைய கணினிகளில் சிலிகான் டிரான்சிஸ்டரிலிருந்து வரும் உள்ளீட்டு (input) சமிக்கைகளை வெளியீட்டு (output) சமிக்கைகளாக மாற்றிச் சிக்கலான செயற்பாடுகளைச் செய்யும் பணியை ஏரண வாயில்கள் மேற்கொள்கின்றன. டி.என்.ஏ. ஏரண வாயில்கள் ஏரணச் செயற்பாடுகளை, மின்சமிக்கைகள் மூலம் செய்வதற்குப் பதிலாக, டி.என்.ஏ. குறியீடுகள் வழி செய்ய முற்படுகின்றன. உள்ளீடாக (input) இடப்பெறும் மரபணுப் பொருளின் துண்டுகளை இணைத்துப் பின் வெளியீடாகத் (output) தர அவை உதவுகின்றன. எடுத்துக்காட்டாக உம்மை வாயில் (And gate) எனும் மரபணு வாயில் இரண்டு டி.என்.ஏ. உள்ளீடுகளை வேதியியல் முறைப்படி இணைக்கின்றது. இந்த ஏரண வாயில்கள் டி.என்.ஏ. நுண்சில்லுகள் (microchips) வழி இணைக்கப்பெற்று டி.என்.ஏ. கணினி உருவாகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டி.என்.ஏ. கணினியின் உறுப்புகளான ஏரண வாயில்கள் மற்றும் உயிரிச் சில்லுகள் (biochips) ஆகியவை உருவாகிச் செயல்முறைக்கு வர ஆண்டுகள் பல ஆகலாம். ஆனால் அத்தகையதோர் கணினி உருவானால், அது தற்போதைய கணினிகளைவிட மிகவும் கையடக்கமாகவும், துல்லியமான தாகவும், திறன் மிக்கதாகவும் விளங்குமென்பது மட்டும் உறுதி.

சிலிகானின் தொடர்ச்சி

கணினியின் இதயமாக விளங்கும் சிலிகான் நுண்செயலிகள் (microprocessors) கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கணினித் தயாரிப்பாளர்கள் நுண்செயலிகளில் மேலும் மேலும் மின்னணுச் சாதனங்களை நிரப்பி வந்தனர். மூர் (Moore) என்பவர் புகழ் பெற்ற இண்டெல் (Intel) நிறுவனத்தை உருவாக்கியவர்; அவரது விதியின்படி ஒவ்வொரு பதினெட்டு மாதங்களிலும் நுண்செயலிகளில் சேர்க்கப்படும் மின்னணுச் சாதனங்கள் இரு மடங்காகப் பெருகுகின்றன. அவரது மேற்கூறிய விதி கணினியின் விரைவுத்தன்மைக்கும், சிற்றளவுக்கும் ஈடு கொடுக்கமுடியாமல் முடிவுக்கு வந்துவிடும் என அறிஞர்கள் கருதுகின்ரனர். அந்நிலையில் டி.என்.ஏ. கணினிகள்தான் கைகொடுத்து உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிகானுக்குப் பதிலாக டி.என்.ஏ.வைப் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

* உயிரணுவைக் கொண்ட உயிரினங்கள் (cellular organisms) இருக்கும்வரை டி.என்.ஏ.வுக்குப் பற்றாக்குறை ஏதுமிராது.

* ஏராளமான அளவில் டி.என்.ஏ. கிடைக்கும்போது, அது மலிவானதாகவும் இருக்கும்.

* இப்போது உள்ள நுண்செயலிகள் நச்சுத் தன்மையுடைய (toxic) பொருட்களாலானவை; ஆனால் டி.என்.ஏ. உயிரிச் சில்லுகள் தூய்மையானவை.

* இன்றைய கணினிகளைவிட டி.என்.ஏ. கணினிகள் உருவத்தில் பன்மடங்கு சிறிதாக இருக்கும்; ஆனால் அதே நேரத்தில் பன்மடங்கு அதிகமான தரவுகளை (data) டி.என்.ஏ. கணினிகள் ஏற்றுக்கொண்டு சேமித்து வைக்கும்.

* உலகத்தின் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த மீக்கணினிகளைவிட, ஒரு சிறு கண்ணீர்த்துளி அளவேயுள்ள டி.என்.ஏ. கணினி அதிக ஆற்றல் உடையதாக விளங்கும். ஒரு கன செ.மீ. அளவுள்ள இடத்தில் 10 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடிக்குச் சமம்) டி.என்.ஏ. மூலக்கூறுகளை அடக்கலாம்; இதனைக் கொண்டு ஒரே நேரத்தில் 10 டிரில்லியன் கணக்கீடுகளைச் செய்யலாம்.

* இப்போதுள்ள கணினிகள் சங்கிலித் தொடர்போல ஒரு நேரத்தில் ஒரே செயலை மட்டுமே செய்யக்கூடியவை; ஆனால் டி.என்.ஏ. கனினிகள் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவையாக விளங்கும். எனவே இப்போதுள்ள கணினிகளைக் கொண்டு நூறு ஆண்டுகளில் செய்யவேண்டிய சிக்கலான கணக்கீடுகளை, டி.என்.ஏ. கணினி வழியே ஒரு சில மணி நேரங்களில் செய்து விடலாம்.


முதலாவதாக வரப்போகும் டி.என்.ஏ. கனினிகளில் சொற்செயலிகள் (word processors), மின் அஞ்சல் போன்ற வசதிகள் இருக்கும் என்று கூற இயலாது. ஆனால் அவற்றின் கணக்கீட்டு வேகத்தைக் கொண்டு அரசாங்கத்திற்குப் புதிராக இருக்கும் ரகசியக் குறியீடுகளை (secret codes) விடுவிக்கலாம்; விமானங்களுக்கு வசதியான, ஆபத்தில்லாத வழித்தடங்களை அமைத்துத் தரலாம்; எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்தில் எதனாலும் வெற்றி கொள்ள இயலாத கணினியான மனித மூளையைப் பற்றிய புதிர்களை அறிந்து கொள்ளலாம்.

***

டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

மொழிக் கல்வித் துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education

மைசூர் 570006 Mysore 570006


thanks to thinnai.com

ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை

ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை

பிபிஸியிலிருந்து

டி.என்.ஏவை வைத்து பல விஷயங்களை கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், ஏன் சமீபத்தில் நடந்த குற்றங்களின் உண்மையையும் கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். ஆனால், டி.என்.ஏ வை வைத்து ஆதாம் ஏவாள் பற்றிய உண்மையைக் கண்டறிய முடியுமா ?


டி.என்.ஏ என்பது நமது மூதாதையர்களைப் பற்றி அறிய மிகவும் உபயோகமான கருவி. நமக்கும் நம் மூதாதையர்களுக்கும் இருக்கும் இணைப்பை நமக்கு பொதுவாக இருக்கும் டி.என்.ஏவைக் கொண்டு அறியலாம். பிரச்னை நடுவே பாலுறவு வருவதுதான்.


பாலுறவு நமது ஜீன்களை கலக்கிவிட்டுவிடுகிறது (recombination மூலமாக). ஒவ்வொருவரது ?ீன் அமைப்பும் தனிப்பட்டதாக வரும்படிக்கு, நம் பெற்றோரின் ?ீன்களை கலக்கி தாயின் ?ீனிலிருந்தும், தந்தையின் ?ீனிலிருந்தும் சிலவற்றை உதறி சிலவற்றை எடுத்துக்கொண்டு கலக்கிவிடுகிறது. நம்மிடம் நம் தாயிடமிருந்து பாதி, தந்தையிடமிருந்து பாதி வருகிறது. அது, நம் ஒரு தாத்தாவிடமிருந்து கால் பங்குதான் நமக்கு வருகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த பங்கு குறைந்து கொண்டே போகிறது.


அதிர்ஷ்டவசமாக, இந்த மேற்கண்ட சட்டத்துக்கு இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன.

மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏ

Y குரோமசோம்.


மிட்டோகாண்டிரியா என்பது நம் செல்களுக்குள் இருக்கும் இன்னொரு குட்டி செல். இது நம் செல்களுக்கு சக்தியைத் தரும் செல். இதற்கென்று தனியே ஒரு டி.என்.ஏ இருக்கிறது. உங்களிடம் இருக்கும் எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் தாயிடமிருந்தே வருகிறது. அவளும் தன்னுடைய எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவையும் தன்னுடைய தாயிடமிருந்தே (உங்களது பாட்டியிடமிருந்து) பெறுகிறாள். இது உடையாத சங்கிலியாக மூத்த மூத்த மூதாதையர் வரைக்கும் செல்கிறது.


மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் வம்சாவம்சமாக வழிவழியாக மாறாமலேயே வருவதில்லை. எப்போதாவது ஒருமுறை, இந்த மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை பிரதி எடுக்கும்போது ஒரு எழுத்து விட்டுப்போய்விடுகிறது. இந்த தவறுகள் ஒரு நிலையான வேகத்தில் நம் மூதாதையர்களின் வம்சத்திலிருந்து இருக்கின்றன. இது ஒருவகை மூலக்கூறு கடிகாரம் போல, அறிவியலறிஞர்களுக்கு உதவுகின்றன.


வ்வாறு நடக்கும் பிரதிஎடுக்கும் தவறுகளை வைத்து( mutations) இரண்டு பேர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னால் ஒரே மூதாதையர் தாயைப் பெற்றிருப்பார் என்று கணக்கிடலாம்.


1980இல் ஆலன் வில்ஸன் என்ற ஒரு அறிவியலாளர் இது போன்றதொரு ஒப்புமை வேலையை செய்தார். உலகம் முழுவதும் இருக்கும் 135 பெண்களிடம் இருக்கும் மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை எடுத்து, அவைகளில் ஒவ்வொருவரிடமிருந்து இன்னொருவர் எவ்வளவு தூரம் வம்சாவழியில் இருக்கிறார் என்பதை கணக்கிட்டார். அதே போல எல்லா பெண்களுக்கும் ஒரே தாய் இருந்திருந்தால் அவர் எவ்வளவு காலத்துக்கு முன்னால் இருந்திருப்பார் என்பதைக் கணக்கிட்டார்.


தாய்வழி முறையில் நாம் எல்லோரும் ஒரு பொதுவான தாயை சுமார் 150,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணிடம் பார்க்கிறோம்.


இன்னொரு வழியில் சொல்லப்போனால், ஒரு மனிதருடைய 10,000ஆவது முப்பாட்டி, நம் எல்லோருக்கும் 10,000ஆவது முப்பாட்டி.


வளை மிட்டோகாண்டிரியல் ஏவாள் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.***

'ஏவாள் ' என்பவள் கறுப்பு முடியோடு, கறுப்பு தோல் நிறத்தோடு, சூடான புல்வெளிப்பாலைவனத்தில் உணவுக்காக அலைந்து கொண்டிருந்திருக்கலாம், பெரும்பாலும். அவள் நிச்சயம் மார்டினா நவரோத்திலோவா போல வலிமையான உடலோடும், விலங்குகளை தன் வெறும் கையாலேயே கிழிக்கக்கூடியவளாகவும் இருந்திருப்பாள் --- நியூஸ்வீக், 11 ஜனவரி 1988

***


இதற்குப் பொருள், அவள் வாழ்ந்தபோது அவள் ஒருபெண் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று பொருளல்ல. நம்மிடம் ஏராளமான பொதுவான தாய்மார்கள் இருந்தார்கள். அவர்களது ஜீன்கள் நிச்சயம் நம்மிடையே இருக்கின்றன. அவை நம் தந்தையர்வழியில் குழப்படி செய்யப்பட்டு, நம்மிடம் வந்திருக்கின்றன.


ஆதாம் விஷயம் என்ன ?


மிட்டோகாண்டிரியா போலவே, நம் தந்தையர் வழியை அறிய Y குரோமசோம் உதவலாம்.


Y குரோமசோம் தந்தை மூலமாக மகனுக்கு வருகிறது. ஆண்களுக்கு ஒரு X குரோமசோமும், ஒரு Y குரோமசோமும் இருக்கிறது. பெண்களுக்கு இரண்டு X குரோமசோம்கள் இருக்கின்றன. இந்த Y குரோமசோம் இருப்பதோ இல்லாததோதான் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.


சமீபத்தில் அறிவியலாளர்கள், Y குரோமசோம் பிரதி எடுக்கப்படும்போது நிகழும் டி.என்.ஏ எழுத்துக்கள் தவறுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். உலகெங்கும் இருக்கும் சுமார் 1062 ஆண்களது Y குரோமசோம்களை எடுத்து ஒப்பிட்டார்கள். நம் எல்லோருக்கும் பொதுவான மூத்த தாத்தா சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதை அறிந்தார்கள். இவரை 'Y குரோமசோம் ஆதாம் ' என்று அழைக்கிறார்கள்.


பார்க்க வினோதமாக இருந்தாலும், மரபணு ரீதியில், இந்த ஆதாம், இந்த ஏவாளைச் சந்திக்கவே இல்லை. இவர்கள் சுமார் 85,000 வருடங்கள் இடைவெளி விட்டு வாழ்ந்தவர்கள்.


இது எப்படி இருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். விடை எளியது. நமது மரபணு ஜீன் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே ஒரு பரிணாம வரலாறு இருக்கிறது. ஆகவே நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாம்களும், ஒன்றுக்கு மேற்பட்ட ஏவாள்களும் இருக்கிறார்கள். அது நீங்கள் நமது டி.என்.ஏவில் இருக்கும் எந்தப் பகுதியைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.


**

http://www.bbc.co.uk/science/genes/dna_detectives/adam_and_eve.shtml

***

வெள்ளி, செப்டம்பர் 11, 2009

ஒரு தொடர்பதிவு

நண்பர் இஸ்மத் என்னை தொலைப் பேசியில் அழைத்து, ஒரு தொடர்பதிவுத் தொங்களில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள் நான் உங்களையும் இதில் கோர்த்துவிட்டு விட்டேன் வாங்க வந்து நீங்களும் கொஞ்சம் தொங்குங்கள் என்று கொக்கியைப் போட்டுவிட்டார், பார்த்தேன் நம்ம மட்டும் தொங்கவில்லை நம்மோடு இன்னும் மூன்று பேர் தொங்கப் போகிறார்கள் என்ற சந்தோசத்தோடு ஆரம்பிக்கின்றேன் (நாங்க நாலுப் பேருக்கு கொக்கி ரெடி பண்ணிட்டோம்ல)

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்;

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்1. அன்புக்குரியவர்கள் : அன்பு செலுத்தக் கூடியவர்கள்

2. ஆசைக்குரியவர் : ஆசையாய் யாரையும் அணுகுவது கிடையாது

3. இலவசமாய் கிடைப்பது : அறிவுரை

4. ஈதலில் சிறந்தது : கல்வி

5. உலகத்தில் பயப்படுவது : மனசாட்சி

6. ஊமை கண்ட கனவு : மறைக்கப்ட்ட உண்மை

7. எப்போதும் உடனிருப்பது : நிகழ் காலம்

8. ஏன் இந்த பதிவு : உண்மை சொல்ல வாய்ப்பு

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : போதும் என்ற மனம்

10.ஒரு ரகசியம் : உன்னைத் தவிர வேறு இல்லை

11.ஓசையில் பிடித்தது : மழழையின் சிரிப்பு

12.ஔவை மொழி ஒன்று : மதியாதார் தலைவாசல் மிதியாதே

13.(அ)ஃறிணையில் பிடித்தது: குதிரை

1. A – Avatar (Blogger) Name / Original Name :: நிலாமலர்கள் - ராஜா கமால்

2. B – Best friend? : நட்புக்காக மட்டும் நட்புடன் இருப்பவர்

3. C – Cake or Pie? : Cake

4. D – Drink of choice? : இதமளிக்கும் எல்லாம்


5. E – Essential item you use every day? - அறிவு

6. F – Favorite color?: வெண்மை

7. G – Gummy Bears ;Or Worms : இந்த கேள்வி எனக்கல்ல

8. H – Hometown? – தஞ்சை

9.I – Indulgence? – அனுமதிக்கப் பட்ட எல்லாம்

10. J – January or February? – வருடத்தின் முதல், இரண்டாவது மாதங்கள்

11. K – Kids & their names.: ரொஃபினா, ஜிமானா, அஹ்மத்

12. L – Life is incomplete without? - மனைவி

14. N – Number of siblings? – விழி நீரை துடைக்கும் விரல்கள் எல்லாம்

15.O – Oranges or Apples?ஆப்பிள் (உரிக்காம சாப்பிடலாமே)

16. P – Phobias/Fears? - அநியாயம் ஆட்சி செய்யும் போது

17. Q – Quote for today? - சோதனைகள் தடைகற்கள் அல்ல, மாறக படிக்கற்கள்

18. R – Reason to smile? - வஞ்சமற்ற பிஞ்சுகளை காணும் போது

19. S – Season? - மழைக் காலம்

20. T – Tag 4 People? - வலைபதிவு நண்பர்கள், சையது, வாஹிது, சென்சி, செந்தில்

21.U – Unknown fact about me? – நான் ரொம்ப நல்லவங்க

22.V – Vegetable you don't like? – அப்படியெல்லாம் இல்லீங்கோ

23. W – Worst habit? – மெய்யாலுமே இல்லீங்கோ

24. X – X-rays you've had? – அவசியம் இல்லீங்கோ(சும்மா பார்த்தே சொல்லலாம்)

25. Y – Your favorite food? – அம்மா வக்கிற பருப்பு சாம்பார்