சனி, நவம்பர் 21, 2009

நட்பு என்பது.



நட்பு என்பது மிகப் பெரிய மலை, அதை பலர் பல கோணங்களில் பார்த்து பகரிந்து இருக்கின்றனா. நட்பு ஒரு அலாதியான ஒரு அதி அற்புதமான உணர்வுப் பூர்வமான ஒன்று, நட்பின் முதல் தகுதியே எதிர்ப்பார்பின்மை, அது ஒரு அலாதியான சுகம், நட்புக்கும் காதலுக்கும் சில கருக்துக் குழப்பங்கள் சிலரிடம் உண்டு.



ஆழமாக நோக்கினால் காதலில், காதலனிடமிருந்து காதலிக்கு ஒரு எதிர் பார்ப்பு, காதலனுக்கும் காதலியிடமிருந்து ஒரு எதிர் பார்ப்பு அங்கு ஒரு give and take இருக்கிறது கணவன் மனைவியும் அப்படித்தான், என்னை நீ பாதுக்காக்க வேண்டும் எனக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் எல்லாம நீ தரவேண்டும் நான் உன் தேவைகளைப் பூர்த்தி செய்வேன், உன் சுக துக்கங்களைப் பகிhந்து கொள்வேன் என்ற gentle man agreement தான் திருமணமும் அங்கும் ஒரு give and take இருக்கிறது.



மேலே சொன்னது எல்லாம் உண்மையான காதல், உண்மையான திருமண பந்தம், தற்போது எல்லாவற்றிக்கும் அர்த்தம் மாறிவிட்டது, சரி நட்புக்கு வருவோம் நட்பை இதனுடன் நாம் ஒப்பிட்டால், ஒப்பிடவே முடியாத உயரத்தில் நட்பு இருக்கும், இப்போதெல்லாம் உண்மையான நட்பு மிகவும் அருகி விட்டது அதன் இலக்கணங்களும் மாறி விட்டது.


ஒரு உண்மை நட்பின் சிறிய அளவுகோள் என்னவெனில், ஒரு சிறிய சந்தோசத் செய்தி என்றாலும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு யாரின் முகம் ஞாபகத்துக்கு வருகிறதோ அவர் உங்கள் உண்மையான நண்பர், அதே முகம் உங்கள் வேதனையான கட்டத்தில் உங்கள் மனதில் தோன்றும் அவரிடம் பேசினால் மனம் லேசாகும் என்று தோன்றுகிறதோ அங்கு உண்மை நட்பு இருக்கிறது.


இது இரண்டு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் எந்த பக்கத்திலாவது குறைந்தால் நட்பு என்ற ரயில் வண்டி நின்று விடும், நம் குழந்தைப் பருவம் முதல் பல நட்புகளை தாண்டி வந்திருப்போம் அந்தந்த காலகட்டத்தில் இரண்டு பக்கமு பலமாக இருந்திருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த நட்பு விடுப்பட்டு போயிருக்கும், நாம் வேறு வேறு புதிய டிராக்கில் பயணித்துக் கொண்டே தான் இருப்போம் இது வாழ்;க்கையின் இறுதி வரைத் தொடரும் ஒரு உறவு இந்த உறவு.

சில நேரங்களில் சில ஆயிரங்களுக்கும் சில லட்சங்களுக்கும் உறவுகளை உதறியிருப்போம் சற்று நிதானித்து பார்த்தோமானால் அந்த லட்சங்களைவ விட உறவுகள் மதிப்புள்ளது என்று உணர்வோம் நல்ல வியாபாரி நஷ்டப் பட விரும்ப மாட்டான் அது போலத்தான் இதுவும் அற்ப தொகைக்காக பெரிய உறவுகளை இழப்பது, நட்பும் அது போலத்தான் வள்ளுவன் கூறுவது போல் ‘ உடுக்கையிழந்தவன் கைப்போல ஆங்கண் இடுக்கண் களைவதாம் நட்பு” இதைத்தான் வேதங்களும் இதிகாசங்களும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூறுகிறது.

வியாழன், நவம்பர் 19, 2009

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன்

பதினொரு அமரிக்க ஜனாதிபதிகளை கண்ட பெருமை இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு உண்டு இது ஒரு ரிக்கார்ட் பிரேக்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் பாரக் ஒபாமா

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஜார்ஜ் டபிள்யு புஸ்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் பில் கிளிண்டன்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஜார்ஜ் புஸ்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ரொனால்ட் ரிகன்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஜிம்மி கார்டர்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஜெரால்ட் போர்ட்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ரிச்சர்ட் நிக்சன்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஜான் எப் கென்னடி

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் டி ஐசன் ஹோவர்

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஹாரி எஸ் ட்ருமன்

சனி, நவம்பர் 14, 2009

அந்த தேவதைக்கு பெயர்

அன்று இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊhசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்


குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.

குழந்தை : என்னை நீ இங்கு பாhத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.



கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.


குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்


கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.



கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் ஜனித்தது.

வியாழன், நவம்பர் 12, 2009

வெற்றிக்கு முன்




வாழ்கையில் பல பெரிய மாற்றங்கள் நிகழு;வது நாம் எடுக்கும் முடிவுகளில் தான், அந்த முடிவு எடுப்பதில் தான் எல்லோருக்கம் பெரிய தடுமாற்றம் ஏற்படும் துணிச்சலாக இறங்கி செயலாற்ற தைரியம் இல்லாமல் நாம் பல காரணங்கள் சொல்லி காலத்தை கடத்துவோம் உண்மையில் நாம் நம் வாழ்கையில் ஒவ்வொரு நிமிசங்களையும் இழந்து கொண்டு வருகிறோம்.

நம்மில் பெரும்பாலனவர்கள் (என்னையும் சேர்த்துதான்) நேரம் இல்லை, நேரம் இல்லை என்ற ஒரு சொல்லை அதிகம் பயன் படுத்துவோம், ஆங்கில அறிஞர் ஜாக்சன் பிரவுன் கூறுகிறார், நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள் வாழ்கையில் சிகரங்களைத் தொட்டவர்கள் எல்லாருக்கும் நமக்கிருந்து நேரம் தான் இருந்து, ஹெலன் கெல்லர், மைக்கெல் ஆஞ்சலோ, லியாடனோ டாவின்ஸி, தாமஸ் ஜெபாசன், மதர் தெரஸா, ஆல்பர் ஐனஸ்டின் போன்றவர்கள் எல்லாம் அந்த நேரத்ததைப் பயன்படுத்தித் தான் சாதனைப் படைத்தார்கள.

நேரம் பறக்கிறது என்பது ஒரு வருத்தமான உண்மையெனில் அதன் விமானியாய் நாம் இருக்கிறோம் என்பது சந்தோசமான உண்மை என்று கூறுகிறார் ஆங்கில அறிஞர் மைக்கெல் ஆர்ட்லர்.

உங்களால் இயலும் வரை எதுவும் காலதாமதமில்லை என்கிறார் ஜார்ஜ் எலியட்.

உங்களை உங்களைத் தவிர யாரும் தோற்கடிக்க முடியாது என்கிறார் ரால்ப் மெர்சன்.

பெரும்பாலோனோர் தோற்பது திறமையின்மையால் அல்ல, சரியான முடிவெடுத்தலும், இலக்கு இல்லாமலும் தான் என்கிறார் பில்லி சண்டே என்ற அறிஞர்.

ஒரு செயலை செய்ய அதிக காலம் யோசிப்பது அதை செய்யாமல் போவதற்க்கான அறிகுறி என்றகிறார் ஈவா யங் என்ற அறிஞர்.

மனிதன் தன் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் தான் தன் வாழ்கையையே மாற்றிக் கொள்ளலாம் என்பதே இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்கிறார் ஹார்வார்டு பல்கலைகழக மனநல நிபுணர் ஜேமஸ் வில்லியம்ஸ்.

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் என்கிறார் அறிவியல் மேதை பென்ஜமின் ஃபிராங்ளின்.

நமக்கு நம் மீதே நம்பிக்கை குறையும் போது தான் அததற்கு நேரம் வரவேண்டாமா என்ற சப்பைக்கட்டு கட்டுகிறோம் அது உண்மையல்ல, நம்மால் இயலாது என்று தோற்றுவிக்கப் படும் மாயை பிரமண்டமாகத்தான் இருக்கும், துணிச்சலாக தொட்டால் நம்மிடம் அது தோற்றுவிடும்.

காரியங்கள் செய்ய காலம், வயசு ஒரு தடையே இல்லை உறுதியான மனசு தான் வேண்டும்

1 இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத் சிங்கிற்கு வயது 23

2.புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

3.ஜான்ஸி ராணி வெள்ளையனை எதிர்த்து போரிட்டப் போது வயது 26
4. திருப்பூர் குமரன் சுதந்திரப் போரட்டத்தில் கலந்து கொண்ட போது வயசு 26

5. மாவீரன் அலெக்சாண்டர் பாரசிகத்தின் மேல் படையெடுத்த போது வயது 22

6. ஐசக் நியுட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்தப் போது வயது 24

7. கலிலியோ தெர்மோ மீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20

8. மார்க்கோ போலோ உலகை சுற்றி வர கிளம்பிய போது வயது 17

9. கிராஹாம்பெல் தொலைப் பேசியை கண்டுபிடித்த போது வயது 29

10. பாஸ்கல் கணக்கிடும் கருவியை கண்டுபிடிக்கும் போது வயது 19

11. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதையை எழுதிய போது வயது 29

12. குற்றாலிஸ்வரன் கடலை நீந்து கடந்த போது வயது 11

13. மாண்டலின் சினிவாசன் புகழ் பெற்றபோது வயது 15

14. ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் புகழ் பெற்ற போது வயது 22

இவர்கள் எல்லாம் காலம் வயதைப் பார்க்கவில்லை முயன்றார்கள் வென்றார்கள்

நாமும் முயல்வோம் வெல்வோம்.

செவ்வாய், நவம்பர் 10, 2009

விண்வெளி ஓடம்

டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தற்போது பாவனையில் உள்ள மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[1] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பாவனயில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. தற்போது இதுவே பாவனையில் இருக்கும் பழமையான விண்ணோடம் ஆகும். டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

[தொகு] கடைசிப் பயணம்
கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் அக்டோபர் 23, 2007 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. "ஹார்மனி மொடியூல்" (Harmony module) எனப்படும் சேதங்களைத் திருத்தும் கருவிகளடங்கிய தொகுதி ஒன்றை STS-120 என்ற விண்கப்பலில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் சென்றது. பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 23வது விண்ணோடப் பயணம் இதுவாகும். அக்டோபர் 25 இல் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது[2]. தனது 15 நாள்-பயணத்தை இது வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நவம்பர் 7, 2007 இல் புளோரிடா திரும்பியது[3].

விண்வெளி ஓடம் ஒருங்கிணைக்கப்படும் படங்கள் உங்கள் பார்வைக்கு.