
உல்லாச வாழ்விற்கான
நுழைவுச் சீட்டு
எல்லையற்றப் பெருவெளியில்
ஏகாந்தமாய்
எந்தத் தேவையுமின்றி
வாழப் போகும்
வாழ்கையின்
துவக்கம்
பசியிலிருந்து
பந்தத்திலிருந்து
பாசத்திலிருந்து
பயத்திலிருந்து
விடுபடப் போகும்
விசேச நாள்
சுமையாய் சுமந்த
நினைவுகளை
இறக்கி வைக்கப் போகும்
இனிய நாள்
நான் என்ற பொய்
முகவரியை விட்டு
உண்மை அறியப் போகும்
உன்னத நாள்