புதன், மார்ச் 23, 2011

மறந்து நின்றான்






மனிதன்.
விண்ணில் சென்று
மண்ணில் மீளும்
விண்கலம் படைத்து
மகிழ்ந்து நின்றான்

வானில் ஏறி
வட்ட பூமியை
சுற்றி வந்தே
திட்டமிட்டான்

விண்ணை முட்டும்
கட்டிடம் கட்டி
கர்வ முற்றான்

இரவும் பகலாய்
ஓளிர்ந்து நிற்க
மின்னொளிப் படைத்து
கண்டு மகிழ்ந்தான்

விரலசைவில்
விரைந்து செல்ல
வாகனம் படைத்து
ஓடி மகிழ்ந்தான்

கண்ணசைவில்
இயங்கும் பல
கணினி படைத்து
களிபுற்றான்


எல்லாம் படைத்த
மனிதன் இன்று
படைத்த ஒருவனை
மறந்து நின்றான்

படைத்தவனோ
சில வினாடிகள்
அசைந்து
தன் இருப்பு தன்னை
அறிவித்தான்

கடலின் ஆழத்தில்
உளை வைத்தான்
கற்பனைக் கெட்டா
சேதங்களை
விளைவித்தான்

எல்லாம் மறந்து
மனிதனை
அழ வைத்தான்

பலம் அனைத்தும்
எனக்கே என்று
மீண்டும் மீண்டும்
நிரூபித்தான்.

2 கருத்துகள்:

mohamedali jinnah சொன்னது…

எல்லாம் வல்ல இறைவனது ஆற்றல் அளவிட முடியாது . அவன் கருணையாளன் அவனது செயல் அனைத்தும் ஒரு நன்மையாகவே. யார் அறிவார் அவனது நோக்கத்தினை. எல்லாம் நமையாகவே இருக்கும். அவனது ஆற்றலை அருமையாக கவிதை வடிவில் வடித்து தந்தமைக்கு மிக்க பலம் உங்களுக்கு உண்டு .
உங்கள் வலைப்பூவினை அடிகடி வந்து பார்த்து படித்து மகிழ்பவன் நான் .
இங்கு http://seasonsali.com/ LINK 5(Tamil) வந்து பாருங்கள் உங்கள் நிலா மலர்கள் மனம் வீசுவதனை

mohamedali jinnah சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள். அனைத்தையும் படித்து விட்டேன்,புதிதாக கட்டுரை இருக்கும் என வந்து பார்த்து போகிறேன் .இறைவன் கொடுத்த அறிவை மக்களுக்காக பயன் படுத்துங்கள்.