திங்கள், செப்டம்பர் 05, 2011

மரணம்மரணம் என்பது
உல்லாச வாழ்விற்கான
நுழைவுச் சீட்டு

எல்லையற்றப் பெருவெளியில்
ஏகாந்தமாய்
எந்தத் தேவையுமின்றி
வாழப் போகும்
வாழ்கையின்
துவக்கம்


பசியிலிருந்து
பந்தத்திலிருந்து
பாசத்திலிருந்து
பயத்திலிருந்து
விடுபடப் போகும்
விசேச நாள்

சுமையாய் சுமந்த
நினைவுகளை
இறக்கி வைக்கப் போகும்
இனிய நாள்

நான் என்ற பொய்
முகவரியை விட்டு
உண்மை அறியப் போகும்
உன்னத நாள்

5 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின்...பின்னூட்டமிடுவதில் மகிழ்ச்சி...மரணம் படிப்போர் மதியை தூண்டும்.

Rajakamal சொன்னது…

THANKS FOR THE COMPLIMENTS

யசோதா காந்த் சொன்னது…

அருமை நண்பரே

யசோதா காந்த் சொன்னது…

அருமை நண்பரே

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி