செவ்வாய், மார்ச் 24, 2009

அறிவியலில் ஒரு வாழ்க்கை

ஸ்டாஃபன் ஹாக்கிங் (Stephen Hawking)

கைக்குள் பேரண்டம் (Universe in a Nutshell) என்ற ஸ்டாஃபன் ஹாக்கிங் அவர்களது சமீபத்திய புத்தகம் விற்பனை நிலையங்களுக்கு வரத்துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கையையும் அவரது சிந்தனைகளையும் இங்கு சில குறிப்புகளாக வருகிறது


ஸ்டாபன் ஹாக்கிங் 1943ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிறந்தார். அவர் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை முடிக்கும் கடைசி வருடம் அவருக்கு அமைட்ரோபிக் லாட்டரல் ஸ்லரோஸி (ALS) என்ற வியாதி இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.


நரம்பு சம்பந்தமான இந்த வியாதி மருந்துகள் மூலம் தீர்க்க இயலாத, தொடர்ந்து அழிவை ஏற்படுத்தும் ஒரு வியாதி. உடலின் சக்தி செல்லுகளை தொடர்ந்து பாதித்து உடலெங்கும் பக்கவாதத்தை தோற்றுவித்து விடும். இது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 5 வருடத்தில் மரணம் நிச்சயமாகி விடுகிறது பெரும்பாலும்.


எல்லா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஹாக்கிங் தொடர்ந்து வாழ்கிறார். உடல் குப்பையாகி விட்டது. அவரால் பேச முடியவில்லை. அவரை பாதுகாப்பவர்கள் மீது அவர் நம்பி வாழும் சூழ்நிலை தோன்றிவிட்டது. ஆனால் அவரது மனமோ தொடர்ந்து சக்தியோடு வலிமையோடு, புதிய எல்லைகளைத் தொட்டு வளர்கிறது.


காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இவர், அங்கு ஆராய்ச்சியாளராக பதவி உயர்வு பெற்று 1979இல் கணிதத்துக்கான லுகாசியன் பேராசிரியர் கெளரவத்தை அடைந்தார். இந்த பதவியை ஒரு காலத்தில் அணி செய்தவர் ஸர் ஐசக் நியூட்டன்.


ஆனால் இவரது கதை அங்கு யாருக்கும் தெரியாத ஒரு மூலையில் இவரது வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் அப்போது இவரது புத்தகம் வெளிவந்தது.


'காலத்தின் சிறிய வரலாறு ' என்ற புத்தகத்தை 1988இல் ஹாக்கிங் பிரசுரித்தார். பேரண்டத்தின் ஆரம்பம் முடிவு பற்றிய அப்போது பேசப்பட்டு வந்த அனைத்து தேற்றங்களையும் தொகுத்து தன்னுடைய கருத்துக்களையும் தொகுத்து இவர் அளித்த இந்த புத்தகம் மாபெரும் அதிக விற்பனை பெற்று முன்னணியில் வந்தது.


இந்தப் புத்தகம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 1 கோடி புத்தகங்கள் விற்றன. 'யாரும் படிக்காத அதிக விற்பனையாகும் புத்தகம் ' என்று கேலி விமர்சகர்களால் அழைக்கப்பட்டாலும், இந்தப் புத்தகம் மக்களுக்கான அறிவியல் புத்தகங்களில் முக்கியமான இடத்தை இன்றும் வகித்து வருகிறது. இந்தப் புத்தகத்துக்குப் பின்னர் ஹாக்கிங் பேரரசர்களாலும், பிரதமர்களாலும், ஜனாதிபதிகளாலும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.



அந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த புதிய புத்தகமான 'கைக்குள் பேரண்டம் ' இன்று பேசப்பட்டு வரும் புதிய தேற்றங்களையும் இன்னும் ஹாக்கிங் அவர்களது தத்துவார்த்த சிந்தனைகளையும் கொண்டுள்ளது.


அவரது முக்கியமான தேற்றம் என்பது 'அறிவியலாளர்கள் ஏற்கெனவே அனைத்துக்குமான தேற்றத்தை (theory of everything)ஐ கண்டுபிடித்து விட்டார்கள் ' என்பதுதான்.


மிக நுணுக்கமான பொருட்களை ஆராயும் க்வாண்டன் அறிவியலும், மிகப்பெரிய பொருட்களை பேசும் 'பொதுச் சார்பியல் கொள்கையும் ' இணைந்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அனைத்துக்குமான தேற்றம் உருவாகும் என்ற கருத்தை ஐன்ஸ்டான் தெரிவித்தார்.


ஹாக்கிங் அவர்களும் அவரது தோழர்களும், காலவெளி 11 பரிமாணங்களைக் கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார். இந்த புது தேற்றம் அனைத்தையும் விளக்கும் என்று கூறுகிறார் ஹாக்கிங்

thanks to thinnai.com

கருத்துகள் இல்லை: