ஞாயிறு, மார்ச் 01, 2009

பூவாள்

பூவாள்
கனி மொழியாள்
காந்த விழியாள்
பூ முகத்தாள்
புன் சிரிப்பாள்
தங்க நிறத்தாள்
தாமரையாள்
மென் குரளாள்
சொல்லால் சுவையாள்
தேன் தமிழால்
எனைக் கவர்ந்தாள்

கொடி இடையாள்
பூ வடியாள்
பூங் குழலாள்
பூ முடித்தாள்
புன்னகைத்தாள்
நிலம ; பார்த்தாள்
நிலவாய் நின்றாள்

வரவோ என்றாள்
வண்ண மயமானாள்
எண்ண மயமானாள்
என்னில் ஒன்றானாள்
சொல்லொண்ண சுவையானாள்

கையால்
மெய்யால்
தீணடல்
வேண்டாள்
நாணத்தால்.
இனியாள்
அவள்
என் இல்லாள்

கருத்துகள் இல்லை: