ஞாயிறு, நவம்பர் 16, 2008

வேர்கள்


நான் கண் மூடிய கண நேரத்தில்
என் கனவில் நீ வருகிறாயே
என் விழி திரையை
உன் பிம்பம் என்ன
விலைக்கு வாங்கி விட்டதா

நெஞ்சத்தில் நீ தூவிய
நினைவு வித்துகளால்
இன்று என் இதயம் முழுவதும்
உன் உருவ மரங்கள்
நான் வெட்டி வெட்டி அலுத்து விட்ட
ஒரு மரம் வெட்டி

இந்த தோட்ட காரனின்
அனுமதி இன்றியே தோன்றும்
புதிய புதிய உன் உருவ மரம்
வெட்ட வெட்ட வளரும்
ரகஸியம் எனக்கு புரிந்து விட்டது

உன் உருவ மரத்தின் வேர்கள்
என் உயிருக்குள்
சுவாசம் இருக்கும் வரை
காயாது வளரும் இந்த
காதல் மரங்கள்
உரங்களாய் உன் நினைவுகள்
உயிருள்ள வரை ஓயாது
இந்த கனவுகள்

நினைத்து நினைத்து அலுத்து போய்
நித்திரைக்கு செல்லும் ஒவ்வொரு நாளும்
நடக்கும் இது ஒரு நித்திய நாடகம்

கருத்துகள் இல்லை: