ஞாயிறு, நவம்பர் 16, 2008

உன்னில் நான்நீ விழி வழி பேசும்
மொழியில் நான்

சிவக்கும் கன்னத்தில்
சிவப்பாய் நான்

உன் மெல்லிய மேலுதட்டின்
பொன் மீசையில் நான்

சிரிக்கையில் சின்னதாய்
விரியும் செவ்விதழில் நான்

நெருக்கமாய் நிற்கயில்
நடுங்கும் மென் விரலில் நான்

எனைக் காணமல் தேடும்
ஆவலில் நான்

கண்டவுடன் தோன்றும்
மகிழ்வில் நான்

காணத் துடிக்கும்
ஏக்கத்தில் நான்

உன்னில் எனக்கு
எத்தனை இடங்கள்

பெண்ணே நான் இருப்பது
உன் இதயத்தில் மட்டுமல்ல
உன் உணர்விலும் உயிரிலும் தான்.

கருத்துகள் இல்லை: