புதன், நவம்பர் 26, 2008

அது என்ன

அது என்ன? (சற்றே சிறிய சிறுகதை)

அன்று விடுமுறை, அந்த வீட்டின் முகப்பு அறையின் ஜன்னல் அருகே அமர்ந்து தனது லேப்டாப்பில் அலுவலக கணக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு, 80ஐ தொட்டிருந்த அவனது தந்தை அருகேயிருந்த ஈஸி சேரில் சாய்த வண்ணம் ஜன்னல் வழியே சாலையை பார்த்துக் கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் அந்த ஜன்னலில் ஒரு பூனைக் குட்டி ஒன்று வந்தமர்ந்து
வயோதிகம் காரணமாக ஞாபக சக்தி இழந்திருந்த ரகுவின் தந்தை, அந்த பூனையை காட்டி ரகு அது என்ன என்றார், பூனை ப்பா என்றான் கண்களை அகற்றாமல், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் ரகு அது என்ன என்றார், பூனை ப்பா என்றான் ரகு.

மீண்டும் சிறிது நேரம் கழித்து, ரகுவிடம் பூனையை காட்டி அது என்ன என்று கேட்டார் இப்போது ரகு சற்று எரிச்சலுடன் பூனை ப்பா என்றான், பெரியவர் ஒனறும் சொல்லவில்லை, சிறிது நேரம் கழித்து அதே கேள்வியை முதன் முறையாக கேட்பது போல் கேட்;;டார் அந்த வயோதிக தந்தை, இந்த முறை வெடித்து விட்டான் ரகு, ஏன்ப்பா உங்களுக்கு எத்தனை முறை சொல்வது பூனையைப் பார்த்தது இல்லை நிங்கள் என்று சற்று குரல் உயர்தியே கூறிவிட்டான் ரகு, வயதின் காரணமாக அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய தாய் புத்தக அலமாரியிலிருந்த பழைய டைரி ஒன்றை கொண்டு வந்து ஒரு பக்கத்தை விரித்து காட்டினாள், ஒன்றும் புரியாத ரகு அந்த பக்கத்தை படிக்கத் தொடங்கினான்.

டைரி எழுதும் பழக்கம் உடைய அவனுடைய தந்தை அன்றய நிகழ்வை எழுதியிருந்தார்,

இன்று ஆடிட்டிங் நடந்து கொண்டிருப்தால் அலுவலகத்தில் மிகவும் பிஸியாக இருந்து கொண்டிருந்தேன் சாதரணமாக அந்த நேரங்களில் அழைக்காத என் மனைவி என்னை தொலைப் பேசியில் அழைத்தாள், என்ன என்று கேட்டேன், அவள் குரல் மிகவும் பலஉறினமாக இருந்தது, என்ன கமலா என்ன விசயம் என்றேன், எனக்கு உடம்புக்கு முடியலைங்க, நம்ம பையனுக்கு ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு போக முடியாது நீங்க கொஞசம் ஆபிஸில் பர்மிசன் கேட்டுக் கொண்டு இன்று மட்டும் கொடுத்துவிட்டு வாங்க என்றாள், என்னாள் மறுக்க முடியவில்லை, லன்ச் ப்ரேக் இல்லாமல் ஆடிட் நடக்கும் போது எப்படி பர்மிசன் கேட்பது, என் பையன் பசியோடு இருப்பான் என்ற எண்ணம் என்னை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை.

மேனஜரிடம் சூழ் நிலையை சொல்லி அரை மனது சம்மதத்துடன் உணவுடன் பள்ளிக்கு விரைந்தேன் அம்மாவை காணத என் மகன் முகத்தில் ஏமாற்றம் கண்டேன் 4 வயது சிறுவனுக்கு என்ன விளங்கும், ரமேஷ் கண்ணா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதான் நான் கொண்டு வந்தேன் என்று டிபன் பாக்ஸை பிரித்து வைத்து ஊட்ட தொடங்கினேன் பிறகு கவனம் மாறிய என் மகன் அங்கே சிந்தியவற்றை உண்ண வந்த காகங்களை காட்டி இது என்ன ப்பா என்றான் இது பேர் காகம் என்றேன், சிறிது நேரம் கழித்து மீண்டும் கேட்டான் மீண்டும் சொன்னேன், மீண்டும் கேட்டான் மீண்டும் சொன்னேன், இதே போல் இருபது தடவைக்கும் அதிகமாக கேட்டிருப்பான் , ஒவ்வொரு தடவையும் அவனை இருக அணைத்துக் கொண்டு பதில் சொன்னேன், என் மகனுடைய கேள்விக்கு பதில் சொல்வதில் எனக்கு ஆனந்தம் இருந்தது.

இந்த பக்கங்களை படித்தவுடன்; ரகுவின் கண்கள் பனித்தன, எழுந்து சென்று அப்பாவின் தோள்களை அன்புடன் பிடித்துக் கொண்டான், இப்போதும் அந்த பெரியவர் எந்த சலனமும் இல்லாமல், அவன் செய்கைக்கு அர்தம் விளங்காமல் எதார்த்தமாகவே இருந்தார்.