வெள்ளி, அக்டோபர் 24, 2008

எனக்கு நீ


எனக்கு நீ

சாதரண உடை
சாந்த முகம்
களைந்த கூந்தல்
கள்ளமில்லா சிரிப்பு
ஆனாலும்
உலக அழகி
எனக்கு நீ

எதிர்படும் வாழ்கையில்
எத்தனைப் பெண்கள்
கலக்கும் உடை
கவிழ்கும் பார்வை
ஆனாலும்
உலக அழகி
எனக்கு நீ

இறுக்கமாக உடையணிந்து
பெண்கள் நெருக்கமாக
போகும் போதும்
சுருக்கமாகச் சொன்னால்
நெஞ்சுக்குள் சுகந்தமாய்
எனக்கு நீ

என் இதயம்
கவலை எனும்
கரு மேகத்தால்
சூழப்படும் போதும்
வெளிச்சந் தரும்
மின்னலாய்
எனக்கு நீ

நான் தனிமை எனும்
நந்தவனத்தில்
கவிதை பூக்கள்
பறிக்கும் போதும்
தென்றலாய்
எனக்கு நீ

ஆம்
எனக்கு மட்டும்
நீ

4 கருத்துகள்:

தங்கராசா ஜீவராஜ் சொன்னது…

\\\சாதரண உடை
சாந்த முகம்
கலை...ந்த கூந்தல்
கள்ளமில்லா சிரிப்பு
ஆனாலும்
உலக அழகி
எனக்கு நீ\\\

மென்மையான, அழகான வரிகள்.....

தமிழினி சொன்னது…

உங்கள் கவிதைகள் அழகாக இருக்குது அண்ணா.

Rajakamal சொன்னது…

தங்களது வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி திரு தங்கராசா அவர்களே

Rajakamal சொன்னது…

தங்கை தமிழினிக்கு, வருகைக்கும் பாரட்டுக்கும் எனது நன்றிகள்