சனி, அக்டோபர் 25, 2008

பூ


தேவையில்லை

பூ வாசம் நுகர எனக்கு
பூ கையில் தேவையில்லை
தென்றலை நான் அனுபவிக்க
ஒரு சோலை இங்கு தேவையில்லை
குயிலின் குரல் கேட்பதற்கு
குயில் அருகில் தேவையில்லை
மனம் எனும் யாழினிலே
நினைவெனும் தந்தி மீட்ட
விரலொன்றும் தேவையில்லை
அது போல
நான் உன்னை காதலிக்க
நீ இங்கு தேவையில்லை.


என்னவள்

என்னவளைப் பற்றி
என்னிடம்
ஒரு வரியில்
கேட்டார்கள்
நான் சொன்னேன்
அவள் ஒரு
அழகான இம்சை

கருத்துகள் இல்லை: