வெள்ளி, அக்டோபர் 17, 2008

கலகம்

கலகம்

பெண்னே என்னை
கண்ணுக்குள் புகுந்து ஏன்
கலகம் செய்கிறாய்
என் இதயமென்னும்
நீரோடையில்
நித்தம் உன் குதியாட்டம்

கலங்கியது நீரோடை
மட்டுமல்ல
என் நெஞ்சமும் தான்
என் சிந்தனை எனும்
அமைதிப் பூங்காவில்
நித்தம் ஏன் சத்தம் செய்கிறாய்
சிதறியது என்
சிந்தனை மட்டுமல்ல
என் சித்தமும் தான்
உன் மென்மையான அந்த
சிரிப்பல்லவா என்னை
சிதிலமாக்கியது
உன் கண்ணுக்குள்
என்ன ஆயுதம்
சத்தமின்றி அதைக்கொண்டு
நீ யுத்தம் புரிகிறாய்
அணுகுண்டை விட
பலமான ஆயுதம்
அதனால் எனக்குள்
பலத்த சேதம்

பெண்ணே போதும்
என்னை விட்டு விடு
பாவம் நான்
நிராயுதபாணி.

கருத்துகள் இல்லை: