திங்கள், செப்டம்பர் 27, 2010

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

இந்த பூமி கிரகத்தில் படைப்பினங்களிலேயே மிகப் பெரியது இந்த நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் என்படும் மிருகங்களைவிட இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.

இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.

இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் (ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம் 188 டெசிபல் ஆகும் இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்புக் கொள்ள முடியும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை தாவிக் குதிக்கிறது 100 மீட்டர் ஆழம் வரை சென்று வருகிறது, ஏறத்தாழ தன் வாழ்நாள் முழுவதும் கடலின் அடிமட்டத்திலேயே கழிக்கிறது.

கப்பல்கள் கடலில் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் செல்கிறது, நீலத்திமிங்கிலங்கள் மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு 160 கிமீ துராத்திற்கு பயணம் செய்கிறது.

அது மேல் துளையின் மூலம் பிய்ச்சி அடிக்கும் தண்ணிர் இரண்டு மாடி கட்டிடம் உயரம் செல்லும்.

ஒரு வருட கர்பத்திற்கு பிறகு இது குட்டி ஈனுக்கிறது, அதன் எடை பிறந்த உடன் 2700 கிகி அது 8 மீட்டர் நீளம் இருக்கும், இது ஒரு நாளைக்கு 190 லிட்டர் பால் அருந்தும், 1 மணிக்கு 4.5 கிகி இதன் எடைக் கூடுகிறது, ஒரு நாளைக்கு கூடும் எடை 90 கிகி ஆகும்.

7 – 9 மாதங்களில் இது 15 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது, சில நிபுணர்களின் கருத்து கணிப்பு 1 வருடத்தில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. இது பாலுறவுக்கு தயாராகும் வயது 5 – 10 ஆகும் இதன் கர்ப காலம் 1 வருடம் ஆகும். ஒரு ஆப்பிரிக்க யானையின் கர்ப காலம் 18 – 22 மாதங்களாகும்.
விலங்கினங்களிலேயே கர்பத்தில் அதிக வேகமாக வளரக்கூடியது இந்த நீலத்திமிங்கிலமாகும் 3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு 2.5 செ.மி நீளம் வளர்கிறது 7 மாதங்களில் தோரயமாக 3.5 மீட்டர் நீளம் வளர்ந்து விடுகிறது.

இது அட்லாண்டிக் கடலில் சுமார் 2000 மீன்கள் உண்டாகும் என்று கணக்கிடப்படுகிறது. இதை 1960 ஆண்டு Internation whaling commission இதை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது.

9 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

அறியத் தகவலுக்கு நன்றி.

mohamedali jinnah சொன்னது…

அறிவினை அடக்கி வைத்து சில நாட்கள் எப்படி இருந்தீர்கள் .இன்சால்லாஹ் தொடரட்டும் இந்த வேகம். வேண்டும்
அது எங்களுக்கு உங்கள் தொடர் .

Rajakamal சொன்னது…

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே, தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் மிக்க நன்றி.

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ISMATH

Unknown சொன்னது…

ஆர்வத்தைக் கிளறும் செய்திகள். சிறப்பான பதிவு

Rajakamal சொன்னது…

thank you very much katheem annan, for your kind opinion,

Rajakamal சொன்னது…

thank you very much katheem annan, for your kind opinion,

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இது ஒரு சாதுவான கடற்பிராணி. வருடாவருடம் அவுஸ்ரேலியா; நியூசிலாந்து; கனடா; நோர்வே;தென் அமெரிக்க கடலோர நாடுகளில் இவற்றை பார்வையிட சுற்றுலாப் பிரயாணிகளை அழைத்துச் செல்கிறார்கள். அதனால் ஏற்படும் மனித அறிமுகத்தால் பழக்கமாகி பார்வையாளர் படகுகளுக்கு சமீபத்தில் வந்து மிக ஆர்வமாகப் பழகுவதையும்; சில பார்வையாளர்கள் அவை அருகில் நீந்துவதையும் நசனல் யீயோகிரபியில் பார்த்தேன்.
திமிங்கிலம் கப்பல்களைப் புரட்டும் என்பது வீண்புரணி.

Rajakamal சொன்னது…

தகவலைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி யோகன் அவர்களே. தங்கள் வருகைக்கு நன்றி