புதன், நவம்பர் 04, 2009

விழுந்து விட்டேன்வாழ்கை எனும் பாதையிலே
வழி நெடுகப் பள்ளங்கள்- அதில்
அறிவுக் கண்; மூடிக் கொண்டு
அறியாமல் விழுந்து விட்டேன்

பள்ளிப் பருவத்திலே
விளையாட்டில் விழுந்து விட்டேன்

கல்லூரிக் காலத்திலோ
காதலிலே விழுந்து விட்டேன்

பொருள் ஈட்டும் காலத்தில்
பொழுது போக்கில்
விழுந்து விட்டேன்

புரியாமல் சில நேரம் பெண்ணின்
புன்சிரிப்பில் விழுந்து விட்டேன்

தெரிந்தே சில நேரம்
தேவைகளில் விழுந்து விட்டேன்

தேவைகள் நிறைவேற
தேடுதலில் விழுந்து விட்டேன்

நிறைவேறா தேவையினால்
வாடுதலில் விழுந்து விட்டேன்

சிந்தனை எனும் சிறகொடிந்து
சீர் கேட்டில் விழுந்து விட்டேன்

அஞ்ஞான பேரிருளில்
அறியாமல் விழுந்து விட்டேன்

விஞ்ஞான மாயையிலும்
வீணாக விழுந்து விட்டேன்

வழி நெடுகப் பள்ளங்களில்
விழுந்து விழுந்து அடிபட்டேன்
அடிபட்ட காயம் இன்னும்
ஆறாமல் நெஞ்சினிலே

விழுந்து விட்ட நான் இன்று
எழுந்து நிற்க முயலுகிறேன்
ஏற்றுக் கொள் என் இறைவா

7 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

//வழி நெடுகப் பள்ளங்களில்
விழுந்து விழுந்து அடிபட்டேன்
அடிபட்ட காயம் இன்னும்
ஆறாமல் நெஞ்சினிலே

விழுந்து விட்ட நான் இன்று
எழுந்து நிற்க முயலுகிறேன்
ஏற்றுக் கொள் என் இறைவா //

ராஜ்கமல்,

சார்.சார், அடிக்கடி விழறீங்களே

இறைவன் இருக்கட்டும். "அவங்க" ஏத்துக்கிட்டாங்க தானே?

Rajakamal சொன்னது…

கரக்டா பாயிட்டை புடிக்கிறீங்க சத்ரியன், அதல்லாம் ஒரு மாதிரி சொல்லி சரி பண்ணிட்டம்ல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

Rajakamal சொன்னது…

கரக்டா பாயிட்டை புடிக்கிறீங்க சத்ரியன், அதல்லாம் ஒரு மாதிரி சொல்லி சரி பண்ணிட்டம்ல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

மலர்வனம் சொன்னது…

Suya parisothanai mathiri nam nammudaiya thavarukalai unarnthu thiruntha ninaipathu arivujeevikalin kunum... Good.

- Trichy Syed

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sayad

சி. கருணாகரசு சொன்னது…

விழுந்து விழுந்து எழுதிய கவிதை மிக அழகா இருக்கு. (காயமின்றி)

Rajakamal சொன்னது…

காயம் இப்போது இல்லாவிட்டாலும் அதன் தழும்புகள் இன்னும் இருக்கிறது கருணகரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி