செவ்வாய், நவம்பர் 10, 2009

விண்வெளி ஓடம்

டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தற்போது பாவனையில் உள்ள மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[1] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பாவனயில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. தற்போது இதுவே பாவனையில் இருக்கும் பழமையான விண்ணோடம் ஆகும். டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

[தொகு] கடைசிப் பயணம்
கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் அக்டோபர் 23, 2007 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. "ஹார்மனி மொடியூல்" (Harmony module) எனப்படும் சேதங்களைத் திருத்தும் கருவிகளடங்கிய தொகுதி ஒன்றை STS-120 என்ற விண்கப்பலில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் சென்றது. பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 23வது விண்ணோடப் பயணம் இதுவாகும். அக்டோபர் 25 இல் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது[2]. தனது 15 நாள்-பயணத்தை இது வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நவம்பர் 7, 2007 இல் புளோரிடா திரும்பியது[3].

விண்வெளி ஓடம் ஒருங்கிணைக்கப்படும் படங்கள் உங்கள் பார்வைக்கு.5 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

நாசர்
படங்கள் அத்தனையும் அருமை...விஞ்ஞான கட்டுரை படித்ததைப் போன்று இருக்கிறது....

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ismath

சத்ரியன் சொன்னது…

ராஜ்கமல்,

பயனுள்ள தகவலும், பார்க்காத படங்களும்!

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
chatriyan

Rajakamal சொன்னது…

chatriyan u know i am your follower, for your beautiful poems