ஞாயிறு, நவம்பர் 08, 2009
நான் - நீ
அந்தி வரும் நேரமெல்லாம்
புன்னகை சிந்தி வரும்
புது மலரே - நான்
சிந்திக்கும் நேரமெல்லாம் - என்
சிந்தையிலே வரும் உருவே
உன் முழு மதி முகம்
காணும் போதெல்லாம்
நான் முதல்வனாய்
முடிசூட்டிக்கொள்வேன்
நீ வீதி உலா வரும்போது - நான்
பாதி நிலவாய் பாதையில் நிற்பேன்
ஒரே ஒரு பார்வை
பார்த்து விட்டு போ - என்
முகம் முழு நிலவாகிவிடும்
உன் சின்ன விழி
விண்மீனாய் சிரிக்கயில் - என்
இரவு பொழுது பிரகாசமடையும்
உன் பட்டு பார்வை
பட்ட பத்து நிமிடத்திற்கு
மனசுக்குள் பட்டாம் பூச்சி
உன் விடிவெள்ளிக் கண்களை
கண்டது முதல்
எனக்கு விழி மூடா
இரவுகள் பல
இந்த விடுகதைக்கு
விடை சொல் மலரே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
Roja poovai boondra....
Then sinthum....
Apple Thundu mathiri....
No.... No..... antha alaghana Vuthadukalai Varnikka varthaikalai thedukireen....
Syed
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
syed
//உன் விடிவெள்ளிக் கண்களை
கண்டது முதல்
எனக்கு விழி மூடா
இரவுகள் பல
இந்த விடுகதைக்கு
விடை சொல் மலரே...//
ராஜ்கமல்,
நான் சொல்லவா?
"காதல்".
கவிதை நடை அருமை.
ஆம் "காதல்" அதை சுவைத்தவர்களுக்கு மட்டும் தான் அதன் சுவையும் தெரியும், சுமையும் தெரியும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்
கருத்துரையிடுக