வியாழன், நவம்பர் 12, 2009
வெற்றிக்கு முன்
வாழ்கையில் பல பெரிய மாற்றங்கள் நிகழு;வது நாம் எடுக்கும் முடிவுகளில் தான், அந்த முடிவு எடுப்பதில் தான் எல்லோருக்கம் பெரிய தடுமாற்றம் ஏற்படும் துணிச்சலாக இறங்கி செயலாற்ற தைரியம் இல்லாமல் நாம் பல காரணங்கள் சொல்லி காலத்தை கடத்துவோம் உண்மையில் நாம் நம் வாழ்கையில் ஒவ்வொரு நிமிசங்களையும் இழந்து கொண்டு வருகிறோம்.
நம்மில் பெரும்பாலனவர்கள் (என்னையும் சேர்த்துதான்) நேரம் இல்லை, நேரம் இல்லை என்ற ஒரு சொல்லை அதிகம் பயன் படுத்துவோம், ஆங்கில அறிஞர் ஜாக்சன் பிரவுன் கூறுகிறார், நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள் வாழ்கையில் சிகரங்களைத் தொட்டவர்கள் எல்லாருக்கும் நமக்கிருந்து நேரம் தான் இருந்து, ஹெலன் கெல்லர், மைக்கெல் ஆஞ்சலோ, லியாடனோ டாவின்ஸி, தாமஸ் ஜெபாசன், மதர் தெரஸா, ஆல்பர் ஐனஸ்டின் போன்றவர்கள் எல்லாம் அந்த நேரத்ததைப் பயன்படுத்தித் தான் சாதனைப் படைத்தார்கள.
நேரம் பறக்கிறது என்பது ஒரு வருத்தமான உண்மையெனில் அதன் விமானியாய் நாம் இருக்கிறோம் என்பது சந்தோசமான உண்மை என்று கூறுகிறார் ஆங்கில அறிஞர் மைக்கெல் ஆர்ட்லர்.
உங்களால் இயலும் வரை எதுவும் காலதாமதமில்லை என்கிறார் ஜார்ஜ் எலியட்.
உங்களை உங்களைத் தவிர யாரும் தோற்கடிக்க முடியாது என்கிறார் ரால்ப் மெர்சன்.
பெரும்பாலோனோர் தோற்பது திறமையின்மையால் அல்ல, சரியான முடிவெடுத்தலும், இலக்கு இல்லாமலும் தான் என்கிறார் பில்லி சண்டே என்ற அறிஞர்.
ஒரு செயலை செய்ய அதிக காலம் யோசிப்பது அதை செய்யாமல் போவதற்க்கான அறிகுறி என்றகிறார் ஈவா யங் என்ற அறிஞர்.
மனிதன் தன் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் தான் தன் வாழ்கையையே மாற்றிக் கொள்ளலாம் என்பதே இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு என்கிறார் ஹார்வார்டு பல்கலைகழக மனநல நிபுணர் ஜேமஸ் வில்லியம்ஸ்.
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் என்கிறார் அறிவியல் மேதை பென்ஜமின் ஃபிராங்ளின்.
நமக்கு நம் மீதே நம்பிக்கை குறையும் போது தான் அததற்கு நேரம் வரவேண்டாமா என்ற சப்பைக்கட்டு கட்டுகிறோம் அது உண்மையல்ல, நம்மால் இயலாது என்று தோற்றுவிக்கப் படும் மாயை பிரமண்டமாகத்தான் இருக்கும், துணிச்சலாக தொட்டால் நம்மிடம் அது தோற்றுவிடும்.
காரியங்கள் செய்ய காலம், வயசு ஒரு தடையே இல்லை உறுதியான மனசு தான் வேண்டும்
1 இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத் சிங்கிற்கு வயது 23
2.புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27
3.ஜான்ஸி ராணி வெள்ளையனை எதிர்த்து போரிட்டப் போது வயது 26
4. திருப்பூர் குமரன் சுதந்திரப் போரட்டத்தில் கலந்து கொண்ட போது வயசு 26
5. மாவீரன் அலெக்சாண்டர் பாரசிகத்தின் மேல் படையெடுத்த போது வயது 22
6. ஐசக் நியுட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்தப் போது வயது 24
7. கலிலியோ தெர்மோ மீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20
8. மார்க்கோ போலோ உலகை சுற்றி வர கிளம்பிய போது வயது 17
9. கிராஹாம்பெல் தொலைப் பேசியை கண்டுபிடித்த போது வயது 29
10. பாஸ்கல் கணக்கிடும் கருவியை கண்டுபிடிக்கும் போது வயது 19
11. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதையை எழுதிய போது வயது 29
12. குற்றாலிஸ்வரன் கடலை நீந்து கடந்த போது வயது 11
13. மாண்டலின் சினிவாசன் புகழ் பெற்றபோது வயது 15
14. ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் புகழ் பெற்ற போது வயது 22
இவர்கள் எல்லாம் காலம் வயதைப் பார்க்கவில்லை முயன்றார்கள் வென்றார்கள்
நாமும் முயல்வோம் வெல்வோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
அருமையான தன்னம்பிக்கை கட்டுரை.....பலரின் உதாரணங்கள் சூப்பர்........வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ismath
இளமையில் கல் என்பது சரிதான். அப்போதுதானே சாதிக்க முடியும்.....
நல்ல சிந்தனை இடுகை....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி balasi
அன்பர் ராஜா கமால். மிக அருமையான பதிவு. உண்மைதான் நேரம் நம் கையில் தான் உள்ளது. பலரைப்பற்றியும் குறிப்பிட்டது சிறப்பு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
senthil
Excellent!
- Trichy Syed
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sayed
கருத்துரையிடுக