சனி, நவம்பர் 21, 2009

நட்பு என்பது.



நட்பு என்பது மிகப் பெரிய மலை, அதை பலர் பல கோணங்களில் பார்த்து பகரிந்து இருக்கின்றனா. நட்பு ஒரு அலாதியான ஒரு அதி அற்புதமான உணர்வுப் பூர்வமான ஒன்று, நட்பின் முதல் தகுதியே எதிர்ப்பார்பின்மை, அது ஒரு அலாதியான சுகம், நட்புக்கும் காதலுக்கும் சில கருக்துக் குழப்பங்கள் சிலரிடம் உண்டு.



ஆழமாக நோக்கினால் காதலில், காதலனிடமிருந்து காதலிக்கு ஒரு எதிர் பார்ப்பு, காதலனுக்கும் காதலியிடமிருந்து ஒரு எதிர் பார்ப்பு அங்கு ஒரு give and take இருக்கிறது கணவன் மனைவியும் அப்படித்தான், என்னை நீ பாதுக்காக்க வேண்டும் எனக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் எல்லாம நீ தரவேண்டும் நான் உன் தேவைகளைப் பூர்த்தி செய்வேன், உன் சுக துக்கங்களைப் பகிhந்து கொள்வேன் என்ற gentle man agreement தான் திருமணமும் அங்கும் ஒரு give and take இருக்கிறது.



மேலே சொன்னது எல்லாம் உண்மையான காதல், உண்மையான திருமண பந்தம், தற்போது எல்லாவற்றிக்கும் அர்த்தம் மாறிவிட்டது, சரி நட்புக்கு வருவோம் நட்பை இதனுடன் நாம் ஒப்பிட்டால், ஒப்பிடவே முடியாத உயரத்தில் நட்பு இருக்கும், இப்போதெல்லாம் உண்மையான நட்பு மிகவும் அருகி விட்டது அதன் இலக்கணங்களும் மாறி விட்டது.


ஒரு உண்மை நட்பின் சிறிய அளவுகோள் என்னவெனில், ஒரு சிறிய சந்தோசத் செய்தி என்றாலும் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு யாரின் முகம் ஞாபகத்துக்கு வருகிறதோ அவர் உங்கள் உண்மையான நண்பர், அதே முகம் உங்கள் வேதனையான கட்டத்தில் உங்கள் மனதில் தோன்றும் அவரிடம் பேசினால் மனம் லேசாகும் என்று தோன்றுகிறதோ அங்கு உண்மை நட்பு இருக்கிறது.


இது இரண்டு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் எந்த பக்கத்திலாவது குறைந்தால் நட்பு என்ற ரயில் வண்டி நின்று விடும், நம் குழந்தைப் பருவம் முதல் பல நட்புகளை தாண்டி வந்திருப்போம் அந்தந்த காலகட்டத்தில் இரண்டு பக்கமு பலமாக இருந்திருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த நட்பு விடுப்பட்டு போயிருக்கும், நாம் வேறு வேறு புதிய டிராக்கில் பயணித்துக் கொண்டே தான் இருப்போம் இது வாழ்;க்கையின் இறுதி வரைத் தொடரும் ஒரு உறவு இந்த உறவு.

சில நேரங்களில் சில ஆயிரங்களுக்கும் சில லட்சங்களுக்கும் உறவுகளை உதறியிருப்போம் சற்று நிதானித்து பார்த்தோமானால் அந்த லட்சங்களைவ விட உறவுகள் மதிப்புள்ளது என்று உணர்வோம் நல்ல வியாபாரி நஷ்டப் பட விரும்ப மாட்டான் அது போலத்தான் இதுவும் அற்ப தொகைக்காக பெரிய உறவுகளை இழப்பது, நட்பும் அது போலத்தான் வள்ளுவன் கூறுவது போல் ‘ உடுக்கையிழந்தவன் கைப்போல ஆங்கண் இடுக்கண் களைவதாம் நட்பு” இதைத்தான் வேதங்களும் இதிகாசங்களும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூறுகிறது.

10 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

//சில நேரங்களில் சில ஆயிரங்களுக்கும் சில லட்சங்களுக்கும் உறவுகளை உதறியிருப்போம் சற்று நிதானித்து பார்த்தோமானால் அந்த லட்சங்களைவ விட உறவுகள் மதிப்புள்ளது என்று உணர்வோம் //

சிந்திக்கக்கூடிய வரிகள்....நல்ல பதிவு....

ஆசைகள் மனிதர்களிடம் அதிகரித்து வருகிறது.....உறவுகள் கூட இன்று வணிகநோக்கில் தான் நடைபோடுகிறது....ஆதாயம் இல்லாத எந்த ஒன்றும் அரங்கேருவதில்லை.

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ismath

மலர்வனம் சொன்னது…

நட்பு ஒரு அலாதியான ஒரு அதி அற்புதமான உணர்வுப் பூர்வமான ஒன்று, நட்பின் முதல் தகுதியே எதரிப்பார்ப்பின்மை, அது ஒரு அலாதியான சுகம்,

Very Very Good!

Natpudan...
Trichy Syed

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
syed

சத்ரியன் சொன்னது…

//நாம் வேறு வேறு புதிய டிராக்கில் பயணித்துக் கொண்டே தான் இருப்போம் இது வாழ்க்கையின் இறுதி வரைத் தொடரும் ஒரு உறவு இந்த உறவு.//

ராஜ்கமல்,

நட்பை நட்பாகவேச் சுட்டியிருப்பது அருமை.

சத்ரியன் சொன்னது…

//எதரிப்பார்ப்பின்மை,// = எதிர்ப்பார்ப்பின்மை

ராஜ்கமல்,

எழுத்துப்பிழை என நினைக்கிறேன். திருத்தி விடுங்கள்.(இன்னும் கூட இருக்கிறது)

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்- எழுத்துப் பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி அலுவலக நேரத்தில் அவசரமாக டைப் செய்வதால் வருகிறது.

அன்புடன் மலிக்கா சொன்னது…

நட்பு மிக புனிதமானது நாம்கையாலும் முறையில்..

மிக அழகான நுண்ணிய விளக்கங்கள்
மிகநன்று

நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்..

http://fmalikka.blogspot.com

சத்ரியன் சொன்னது…

ராஜ்

என்னாச்சு? புதிதாக எதுவும் பதிவிடாமல் இருக்கின்றீர்கள்.

காத்திருக்கிறோம் தோழா.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in