செவ்வாய், நவம்பர் 03, 2009
ராசாத்திக்கு
கண்ணுக்குள்ள ஒன்ன வச்சு
காலம் பூரா காத்திருப்பேன்
நெல்லுக்குள்ள அரிசிப் போல
நெஞ்சுக்குள்ள ஓன்ன வச்சு
காலம் பூரா பாத்திருப்பேன்
என் எள்ளுப் பூ ராசாத்தி
ஒரு சொல்லு ஒன்னு சொல்ல வேணும்
பக்குவமா பார்த்து சொல்ல
பாக்குத் தோப்பில் காத்திருப்பேன்
உன் கன்னங் கரு விழியும்
கன்னிப் பேசும் கிளி மொழியும்
நெஞ்சுக் குள்ள நீ விட்ட
ஏவு கணை ஆனதடி
மாலை வெயில் வேளையிலே
மயிலு வரும் சோலையிலே
சோடி தேடும் ஜாதிப் புறா
சோகமாக நிக்குதடி
சொன்ன வேளை வந்த பின்பும்
சொன்னவளை காணவில்ல
சோகம் வந்து நெஞ்சுக் குள்ள
சௌக்கியமா என்றதடி
வேதனையில் வார்த்த வல்ல
என்னவளை என்ன சொல்ல
உன் கன்னக் குழியினிலே
நான் தடுக்கி விழுந்து புட்டேன்
என் நெஞ்சக் குழியினிலே
ஒன்ன வச்சு மூடிப் புட்டேன்
ஒரு மல்லிகை பூ இங்க
மணந் தேடி நிக்குதடி
மனமிறங்கி நீ கொஞ்சம்
மனசெல்லாம் மணக்க வாடி
என் மனசெல்லாம் மணக்க வாடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
//ஒரு மல்லிகை பூ இங்க
மணந் தேடி நிக்குதடி
மனமிறங்கி நீ கொஞ்சம்
மனசெல்லாம் மணக்க வாடி
என் மனசெல்லாம் மணக்க வாடி//
ராஜ்கமல்,
நாட்டுப்புற மெட்டில் நாள்முழுக்க பாடினாலும் அலுக்காது. நல்லாயிருக்கு ராசா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி chatriyan
அதென்ன கருத்தும் கிராமத்து மெட்டிலேயே சொல்றா மாதிரி தெரியுதே.
Bharathiraja padathula varra cinema paddu mathiri kiramathu manam veesiyathu...
Trichy Syed
கருத்துரையிடுக