வெள்ளி, செப்டம்பர் 25, 2009

எத்தனைநித்தம் பிறப்பெடுத்து
பிறவிப் பெருங்கடல்
நீந்துவோர் தான்
எத்தனை

சித்தம் தெளிந்து
சீர் கரை
சேருவோர் தான்
எத்தனை

வாழ்கை கடலினில்
வசதிக் கரை நோக்கி
நீந்துவோர் தான்
எத்தனை

அதை வாழ்கை
முடியுமுன்னே
வாய்க்கப்
பெற்றவர் தான்
எத்தனை


உலகம் என்ற
உருண்டைக்குள்ளே
மனிதன் அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

பசித்த வயிற்றுக்கு
உணவை சேர்க்க
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

பொய்மையிலிருந்து
உண்மைக்கு அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

இருட்டில் இருந்து
வெளிச்சத்திற்கு
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

தீமையிலிருந்து
நன்மைக்கு
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

இதயக் கடலில்
எண்ணங்களுடன்
அடிக்கும் நீச்சல் தான்
எத்தனை

பிறந்தது முதல்
இறக்கும் வரை
வாழ்வதற்கே
நாம் அடிக்கும்
நீச்சல் தான்
எத்தனை

இதில் நீந்தி
கரை சேர்ந்தோர் தான்
எத்தனை

ராஜா கமால்
துபை