புதன், செப்டம்பர் 30, 2009

நலமுடன் வாழ


நலமுடன் வாழ

மூளை மனிதனை முழுவதும் கட்டுபடுத்துகிறது. ஓவ்வொரு உறுப்புக்கும் மூளையிலிருந்தே கட்டளைகள் செல்கின்றன. மூளை சரியாக செயல் படவிட்டால் உடல் உறுப்புகளும் செயல் இழந்து விடும். அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து விடுகின்றன.

எனவே மூளை சோர்வாகவோ, அதிக உழைப்புக்கோ ஆட்பட்டு இருந்தால் நம்மால் மலர்ச்சியாக இருக்க முடியாது ஆகையால் இத்தகைய சிறப்புமிக்க மூளையை நாம் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

மூளையை பாதிக்கும் சில விசயங்களை தொகுத்து தந்திருக்கிறேன்

1.காலை உணவு – Break Fast

காலை உணவு உண்ணாதவர்களின் இரத்ததில் சர்கரையின் அளவு குறைகிறது இதனால் மூளைக்குத் தேவையா சத்துப் பொருட்களை கொண்டு செல்வதில் பற்றாக்குறை ஏற்படுகிறது, மூளையின் இயங்கு திறன் குறைகிறது.

2. அதிகமாக உண்ணுதல் - Over Eating

இது மூளைக்கு இரத்தம் செல்வதை கடினப் படுத்துகிறது இதனால் மூளைத்திறன் குறைகிறது.

3. புகைத்தல் - Smoking
இது அதிக மூளை சுருக்கங்களை உண்டு பண்ணுகிறது இதனால் Alzheimer என்ற நோய் உண்டாகிறது

4. அதிக சர்கரை உண்ணுதல் - High Sugar consumption

அதிக அளவு சர்கரை உண்பது இரத்ததிலிருந்து Protein களையும் Neutrien களையும் மூளை பெறுவதில் தடை ஏற்படுகிறது.

5. சுத்தமற்றக் காற்று – Air polution

நம் உடலிலேயே அதிகம் Oxygen உட்கொள்வது நமது மூளையாகும் சுத்தமற்ற காற்று மூளையின் திறனைக் குறைக்கிறது.

6. தூக்கமின்மை – Sleep deprivation

நாம் நன்றாக தூங்கும் போதுதான் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது, மிகக் குறைவான தூக்கம் மூளையின் செல்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கிறது.

7. தூங்கும் போது தலையை மூழுவதும் மூடுதல் - Head covering while sleeping
தலையை சுற்றி துணியை சுற்றிக் கொண்டு தூங்கும் போது corbon dyoxide அதிகமாகவும் oxygen குறையவும் செய்கிறது இது மூளையை பாதிக்கிறது எழும் போது சோர்வு ஏற்படுகிறது.

8. உடற்சுகமின்றி இருக்கும் போது மூளைக்கு வேலைக் கொடுத்தல் - Working your brain while your illness

uடல் நலமில்லாத நேரங்களில் மூளைக்கு ஓய்வு கொடுப்பது நல்லது இல்லையேல் மூளையை பலஹினப்படுத்தும்

9. நல்ல எண்ணங்களை எண்ணாமை – Lacking in stimlating thoughts

தொடர்சியான நல்ல எண்ணங்கள், தியானம் போன்றவை மூளையை மலாச்சியா வைத்திருக்க உதவும் நல்ல எண்ணங்களின் குறைபாடு மூளையை இறுக்கப் படுத்துகிறது.

10. குறைவாக பேசுதல் - Rarely talking

குறைவாகப் பேசுதல் மூளைத்திறனை அதிகப் படுத்தும் - Intellectual conversation will promote the efficiency of the brain

நல்லதையே எண்ணுவோம் நல வாழ்வு வாழ்வோம்

கருத்துகள் இல்லை: