ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

சிங்கார துபை


சிங்கார துபை

சிங்கார துபையின் அழகுக்கு அழகு சேர்க்க, துபை மெட்ரோ ரயிலின் இயக்கம் தொடங்கி விட்டது. முதன் முதலாக முழுவதும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில் தொடங்கப் பட்டுள்ளது.இதன் நிலையங்கள் முழுவதும் ஏர் கண்டிசன் செய்யப் பட்டுள்ளது, ரயில் வந்து நின்றதும் ரயிலின் கதவும் பிளாட்பாரக் கதவும் சேர்ந்து திறப்பது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
துபை அரசு, 2010 ல் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலை பயன் படுத்துவார்கள் என்று எதிர் பார்கிறது. மேலும் இது தற்போதைய வாகன நெரிசல்களை குறைப்பதோடு, நகரின் முக்கிய இடங்களை இணைக்கிறது.
2005 ல் தொடங்கப்பட்டு 2009 ல் முடிக்கப்பட்ட (இன்னும் பணிகள் முடியவில்லை) இந்த மெட்ரோ ரயில் 12.45 மில்லியன் திர்ஹமில் தொடங்கப்பட்டு 28 மில்லியன் திhஹம் செலவை இது வரை எட்டியுள்ளது.
இதை ஜப்பானியக் கம்பெனிகளான மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரி, மிட்சுபிஸி கார்பரேசன், ஓபாயாசி கார்பரேசன், கஜிமா கார்பரேசன் துருக்கி நாட்டு யாப்பி மர்கசி, ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்தன.
இதன் ரெட் லைன் எனப்டும் டிராக்கின் தூரம் 35 கீமி ராசிதியா முதல் ஜபல் அலி வரை, (இது தொடங்கப் பட்டு விட்டது) கிரின் லைன் எனப்படும் டிராக் அல் கிஸ்ஸஸ் முதல் அல் ஜத்தாஃப் வரை, இது 2010 மாhச்சில் தொடங்படும். மொத்தம் 70 கிமி நீளத்தில் 47 நிலையங்களுடன் இதில் 9 நிலையங்கள் அண்டர் கிரவுண்ட் உள்ளது.
இதில் ஒரு நாளைக்கு 27000 ம் பயணிகள் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது இதன் வேகம் மணிக்கு 40 – 45 கிமி இருக்கும். ஜப்பானிய நிறுவனமான கிங்கி சரயவோ 87 பெட்டிகளை செய்து கொடுத்துள்ளது.இதன் சிக்கனல் முழுவதும் தானியங்கி முறையில் அமைக்கப் பட்டுள்ளது அலுவலக கூட்டம் இல்லாத நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும், கூட்டம் உள்ள நேரங்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறையும ரயில் நிலையத்திற்கு வரும்.கார் நிறுத்தும் வசதிகளும் எதிர்காலத்தில் செய்து தரப்படும், ராசிதியா நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்த வசதியும், ஜிமைரா ஐலண்ட் நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்தும் வசதியும், அல் கிஸ்ஸஸ் நிலையத்தில் 6000 கார் நிறுத்தும் வசதியும் செய்துக் கொடு;க்கப் படும்.இது அமிரக மக்களுக்கு சிறந்த வரபிரசாதமாகும்.

ராஜா கமால்
துபை

12 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

மகிழுந்து இல்லாதவர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்.

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

நல்ல படங்கள் அன்பரே. நன்றி

துபாய் ராஜா சொன்னது…

படங்களும் தகவல்களும் அருமை.

Christine சொன்னது…

greetings from belgium

Rajakamal சொன்னது…

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்

Rajakamal சொன்னது…

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி Dubai raja

Rajakamal சொன்னது…

thanks for greetings madam

நாகா சொன்னது…

Nice Photos..

Mãstän சொன்னது…

நான் துபாயில் இருக்கும் போது இத்திட்டம் வேலை நடந்து கொண்டிருந்தது...

ம்ம்ம்ம்... திரும்ப வந்து பாக்கனும்

பதிவுக்கு நன்றி

Rajakamal சொன்னது…

வாருங்கள் மஸ்தான் வந்து பாருங்கள் துபையை. வருகைக்கு நன்றி

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Mr. Naga