கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
காற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால் இயங்கும் டர்பைன்களை உருவாக்கி வருகிறார். இவை கடல்தண்ணீரை மிகச்சிறியதுளிகளாக மாற்று காற்றில் தெளிக்கின்றன. இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது மழையை உருவாக்குகிறது. 'இது வேலை செய்தால், இதன் பயன் மிகவும் அதிகமாக இருக்கும். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதிலிருந்து பாலைவனத்தை பசுமையாக்கும் வரை இதனை உபயோகப்படுத்தலாம் ' என்று ஸால்டர் கூறுகிறார்.
இந்த டர்பைன்கள் கட்டுமரம் போன்ற படகுகளில் ஏற்றப்பட்டு உலகத்தின் மிகவும் காய்ந்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மழை உருவாக்குவதை அதிகரிக்கலாம்.
இந்த ஐடியாவில் ஏதும் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று இந்த பொறியியல் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
டர்பைன் சுழற்றுவான்களின் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் திவாலைகள் காற்றில் கலந்து டர்பைன் பின்னால் செல்லலாம். உபரி உப்பு கடலுக்குள் விழுந்துவிடும். ஈரப்பதம் ஏறிய காற்று நிலத்துக்குச் சென்று தாக்கும்போது மழை தோன்றும்.
இது பல உபரி தேவைகளைக் கொண்டிருக்கிறது. காற்று கடலிலிருந்து கடற்கரை நோக்கி அடிக்கவேண்டும். காற்று ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சூடாகவும், நிலத்தை சேரும்போது அது நிலத்திலிருந்து மிக உயரத்துக்கு மேகம் அளவுக்குச் செல்லவேண்டும்.
கணினி மாதிரிகளைக் கொண்டு இந்த கருத்தை பரிசோதிப்பதாகவும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
'ஈரப்பதம் ஏற்றப்பட்ட காற்று எங்கு செல்லும் என்று நமக்குத் தெரியாது. இது தட்பவெப்பம் குறித்த மிகவும் கடினமான கேள்வி. அதற்காக நாங்கள் கணினி மாதிரியை உபயோகப்படுத்துகிறோம் ' என்று கூறினார்.
மாதிரி வெற்றிகரமாக இருந்தால், இதனைக்கொண்டு ஒரு உண்மை நிலவரப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் எல்லோரும் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
பாலைவனங்கள் பாலைவனங்கள்தாம். ஏனெனில் இந்த நிலங்களில் இருக்கும் காற்று இறங்குகிறது. இறங்கும் காற்றின் மூலம் மழை வராது. எவ்வளவுதான் அவற்றுக்குள் ஈரப்பதம் ஏற்றினாலும், இறங்குமுகமான காற்றின் மூலம் மழை வராது ' என்று தட்பவெப்பவியலாளரும், டெலிகிராப் பத்திரிக்கை நிருபருமான பிலிப் ஈடன் கூறுகிறார்.
இந்த பரிசோதனையை 15 மாதங்கள் நடத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பயன் இதனை சந்தேகப்படுபவர்களின் இழப்பைவிட அதிகம் என்றும் ஸால்டர் கூறுகிறார்.
செவ்வாய், செப்டம்பர் 22, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக