திங்கள், செப்டம்பர் 28, 2009

ஞானி




உடலையும் உள்ளத்தையும் தாண்டி
உயிரை உரசிப் பார்ப்பவன் ஞானி

உயிருக்குள் இறங்கி
முத்துக் குளிப்பவன் ஞானி

புறங்களின் போர்வையை
நீக்கிப் பார்பவன் ஞானி

அகம் புறம் இரண்டிலும்
விக்ரக நிக்ரகம் செய்தவன் ஞானி

ஆதி முதலாய் எதுவும் பாதி
இல்லை என்பதை ஓதி உணர்ந்தவன் ஞானி

இருப்பதற்கும் இல்லாமைக்கும்
இடைவெளி இல்லை என்பதை
அறிந்து கொண்டவன் ஞானி

ஞானம் என்பதை காட்டுக்குள்
தேடாமல் உடற் கூட்டுக்குள்
தேடுபவன் ஞானி

உள்ளுகுள் ஒளிந்திருக்கும்
சத்துக்குள் சம்பாசிப்பவன் ஞானி

ஞானம் என்பது இறைவன்
கொடுக்கும் தானம்

அதைப் பெற்றவன் உள்ளம்
எல்லை இல்லா வானம்

கருத்துகள் இல்லை: