புதன், அக்டோபர் 07, 2009

கேட்டேன் சொன்னாய்




உறவைக் கேட்டேன்
பிரிவையும் தந்தாய்
காரணம் கேட்டேன்
உறவும், பிரிவும்
பிரிக்க முடியா
இரட்டையர் என்றாய்

அன்பைக் கேட்டேன்
வெறுப்பையும் தந்தாய்
காரணம் கேட்டேன்
அன்பும் வெறுப்பும்
இணை பிரியா
நண்பர்கள் என்றாய்

இன்பம் கேட்டேன்
துன்பமும் தந்தாய்
காரணம் கேட்டேன்
இன்பமும் துன்பமும்
பிரிக்க முடியா
கடலும் அலையும் என்றாய்

பொருளைக் கேட்டேன்
இழப்பும் தந்தாய்
காரணம் கேட்டேன்
பொருளும் இழப்பும்
பிரிக்க முடியா
உடலும் உயிரும் என்றாய்

சுகங்கள் மட்டும்
தனியாய் கேட்டேன்
சோகமும் கூட சேர்;த்தே தந்தாய்
காரணம் கேட்டேன்
சுகமும் சோகமும்
பிரிக்க முடியா
நீரும் மீனும் என்றாய்

வெளிச்சம் கேட்டேன்
இருளையும் தந்தாய்
காரணம் கேட்டேன்
வெளிச்சமும் இருளும்
பிரிக்க முடியா
மலரும் மணமும்; என்றாய்

குளுமைக் கேட்டேன்
உஷ்ணமும் தந்தாய்
காரணம் கேட்டேன்
குளுமையும் உஷ்ணமும்
பிரிக்க முடியா
நிலவும் வானும் என்றாய்

காசைக் கேட்டேன்
செலவையும் தந்தாய்
காரணம் கேட்டேன்
காசும் செலவும்
பிரிக்க முடியா
நீயும் நானும் என்றாய்

எண்ணிப் பாhத்தேன்
எல்லாம் இரண்டு
காரணம் கேட்டேன்
காதில் சொன்னாய்

இன்பம் அறிய
துன்பமும் வேண்டும்
இனிப்பு அறிய
கசப்பும் வேண்டும்
வெளிச்சம் அறிய
இருளும் வேண்டும்
அறிவே நீ
அறிந்தவன் நீ
அடிமை நான்
தலை நிலம் வைத்தேன்

அடிமை எனக்கொரு
வேண்டுதல் என்றேன்
புருவம் உயர்தி
என் முகம் பார்தாய்

இரண்டு இல்லா
ஒரு நிலை வேண்டும்
அடிமை எனக்கு
அருள் செய்ய வேண்டும்

முறுவலாய் பார்த்து
முக்தி என்றாய்
பெற்றதால் நானே
பெரு மகிழ்வடைதேன்.

2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

கமல்ன்னு பேரு வச்சாலே இப்படிதான் போலயிருக்கு! நல்லாயிருக்குன்னு சொன்னேன்!!

Rajakamal சொன்னது…

கமல் மட்டும் தான் புதுசா சிந்திப்பாரா நாங்ளும் ரும் போட்டு யோசிப்போம்ல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையரசன்