செவ்வாய், அக்டோபர் 06, 2009

அவள்நீங்கள் மொட்டுகள்
மலர்வதை பார்ததில்லையே
அவள் புன் சிரிப்பை பாருங்கள்

மீன்கள் சிறகடித்து
பார்ததில்லையே
அவள் கண்களைப் பாருங்கள்

நிலவுக்கு நாசி வைத்துப்
பார்ததில்லையே
அவள் முகத்தைப் பாருங்கள்

கொடி ஆடைக் கட்டிப்
பார்ததில்iயே
அவள் இடையைப் பாருங்கள்

தென்றலுக்கு கால் முளைத்து
பார்ததில்லையே
அவள் நடையைப் பாருங்கள்

சித்தாரின் சிணுங்கள்
கேட்டதில்லையே
அவள் சிரிப்பொலி கேளுங்கள்

ஒரு கவிதை கையசைத்துப்
பார்ததில்iயே
அவள் கையசைவைப் பாருங்கள்

வெண்ணிலா வீதி வந்துப்
பார்ததில்லையே
அந்தப் பெண்ணிலவைப் பாருங்கள்


பின்னலிட்ட மின்னலைப்
பார்ததில்லையே
அவள் வீட்டு ஜன்னலைப் பாருங்கள்

என் பக்கம் வீசாத என
ஏங்க வைக்கும் அவள்
ஒரு பாவடைக் கட்டிய
பருவக்காற்று

பார்வை பட்டாலே
மனதுக்குள்
மழை பெய்ய வைக்கும் அவள்
ஒரு மலர் வைத்த மழை மேகம்

அவளை
உங்களுக்கும் காட்ட ஆசைதான்
என்ன செய்ய
அவள் கனவு முடிந்ததும்
மறைந்துவிடும் மாயக் கன்னி

4 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

"அவள்" உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Nilamathi

அன்புடன் அருணா சொன்னது…

நல்லாருக்கா அவள்!!

Rajakamal சொன்னது…

உங்களுக்கு அவள் நல்லா இருக்காள்ல அப்ப சரிதான் அவ உண்மையிலேயே அழகுங்க, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா