சனி, அக்டோபர் 10, 2009

என்னுள் நீ
மணம் வீசும்
மலர்களிலே
மணம் எந்தப் பக்கம்
அது போல்
என் மனதினிலே
நீ எனக்கு
எந்தப் பக்கம்

ஒளி வீசும் நிலவினிலே
ஒளி எந்தப் பக்கம்
அது போல்
என் நினைவினிலே
நீ எனக்கு
எந்தப் பக்கம்

வீணையிலே
இனிய நாதம்
எந்தப் பக்கம்
அது போல்
என் சுவாசத்திலே
நீ எனக்கு
எந்தப் பக்கம்

ஆகாயத்தில்
நீல வண்ணம்
எந்தப் பக்கம்
அது போல்
என் ஆன்மாவில்
நீ எனக்கு
எந்தப் பக்கம்

மேகத்திலே
மின்னல் ஒளி
எந்தப் பக்கம்
அது போல்
என் தேகத்திலே
நீ எனக்கு
எந்தப் பக்கம்

கடல் நீரில்
உப்பு கள்
எந்தப் பக்கம்
அது போல்
என்னில் கரைந்தவளே
என்னுள் நீ
எந்தப் பக்கம்

கருத்துகள் இல்லை: