வெள்ளி, செப்டம்பர் 12, 2008

மழை


வான் வெளியின் வல்லரசே
உன் பரிவாரங்களுடன்
மேகத்தில் ஆகாய பயணம் செய்யும் நீ
ஆசைப்பட்ட பூமியை மட்டும்
ஆசிர்வதிகிறாய்
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
பசுமை என்னும் பட்டாடை
உடுத்திக்கொள்ளும்

உன் வருகையால் எங்கள்
மனதுக்குள் மகிழ்ச்சித்தூறல்
உன் வருகையால்
வயல் வெளிகள் எல்லாம்
வயலின் வாசிக்கும்
மரங்கள் ஆனந்த தலையாட்டும்

கருமையாய் நீ mமேகத்தில் முகம் காட்டினால்
தோகை விரித்தாடுவது மயில்கள் மட்டுமல்ல
எங்கள் மனமும் தான்

இடி என்னும் மேல சத்தமும்
மின்னல் என்னும் அலங்கார விளக்கும்
உன் வருகையை எங்களுக்கு
தெரியப்படுத்தும்
நீ வந்த பின்
வாடிய பயிரெல்லாம்
வாழ்த்துப்பாடும்

நீ சென்ற பின்னும்
நிறைந்திருப்பது எங்கள்
மனங்கள் மட்டுமல்ல
ஏரிகளும் குளங்களும்
அணைக்கட்டுகளும் தான்

ஆனால் சில வருடங்களாய்
நீ எங்களோடு இணக்கமாய் இல்லை
அதன் விளைவு
எங்கும் குடிநீர் தட்டுபாடு
வறண்ட பூமியின் சோகப்பாட்டு
வாய்க்கால் ஓடும்
ஓசையில் எழும் நாதத்தை
கேட்க காத்து கிடக்கும்
நாத்துகள்

நீ வராமலே போனதால்
நிலங்களில் இல்லது போனது
விளைச்சல்
அதனால் எங்கள்
உள்ளங்களில் என்றும்
உளைச்சல்
எத்தனை கஷ்டம் எத்தனை கஷ்டம்

இபோதெல்லாம்
வானவர்களுடன் மட்டும் தான்
உன் சகவாசம்
மனிதர்களுடன் நீ ஏன்
மல்யுத்தம் செய்கிறாய்
பாவம் நாங்கள்
பவீனர்கள் தோற்றுவிடுவோம்

கருணையை கருப்பாய்
பார்த்த உன் முகம்
இப்போது வெள்ளையாய்
வேகமாய் எங்களை
கடந்து செல்கிறது
மழை துளிகளால்
நனைந்த எங்கள் முகங்கள்
விளித்துளிகளால் நனைகிறது

எத்துனை முறை அண்ணாந்து
எங்களில் சிலர் செய்யும் குற்றம்
உனக்குள் இந்த சீற்றம்
விரைவில் ஏற்படும் மாற்றம்
விழிகளில் தீரும் ஏமாற்றம்

இதோ இதோ
நீ தூரத்து மண்ணில்
பாதம் பாதிக்கும் ஓசை
நீ மண்ணை முத்தமிடும் போது
ஏற்படும் மண் வாசனை
ஏகல் சுவசகுழலை
புல்லங்குழலாக்குகிரது

இனி பூமி குளித்துவிட்டு
உடுத்திக்கொள்ளும்
புது பட்டு
தாகம் தீர்ந்த மரங்கள்
இனி ராகம் பாடும்
வான் மழைக்கு
எங்கள் வந்தனம்

2 கருத்துகள்:

nidurali சொன்னது…

இங்கு இப்பொழுது மழை.இந்த கட்டுரைதனை படிக்கும்பொழுது மனம் குளிர்கின்றது .குளிர்சினை தந்த உங்களுக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் தருகின்ரேன் மனதிற்குள் குடித்து விடுங்கள் .நன்றி

Rajakamal சொன்னது…

மழையைப் பற்றிய கருத்துக்கும் கூல் டிரிங்ஸ்கும் நீடுர் அலி அண்ணன் அவர்களுக்கு நன்றி. மழையைப் பற்றிய படங்களும் கட்டுரையும் அருமை.