வியாழன், செப்டம்பர் 18, 2008

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும்

வானம் பிடிக்கும்
பூமி பிடிக்கும்
குளிர் நிலவு பிடிக்கும்
சுட்டெரிக்கும் சூரியன் பிடிக்கும்
மேகம் பிடிக்கும்
மழை பிடிக்கும்
அலை பிடிக்கும்
ஆழ் கடல் பிடிக்கும்
புல் வெளி பிடிக்கும்
புல்லின் மகுடம்
பனித்துளி பிடிக்கும்
கொக்கு பிடிக்கும்
குருவி பிடிக்கும்
ஆறு பிடிக்கும்
ஆற்று மீன்கள் பிடிக்கும்
காடு பிடிக்கும்
காடு வாழ் விலங்கு பிடிக்கும்
பெண் பிடிக்கும்
பெண்ணின் கண் பிடிக்கும்
நகம் பிடிக்கும்
முகம் பிடிக்கும்
முகத்திரண்டு புருவம் பிடிக்கும்
சிறகடிக்கும் சிட்டு பிடிக்கும்
பளபளக்கும் பட்டு பிடிக்கும்
பூவின் அந்த மொட்டு பிடிக்கும்
வியந்து சொல்ல
இனியும் உண்டு
வியக்கும் போது விளைந்தது
வரிகளாய் சமைந்தது.

2 கருத்துகள்:

தங்கராசா ஜீவராஜ் சொன்னது…

உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வலைப்பூவின் பெயரை தமிழில் தந்தால் நன்றாக இருக்கும்.
உங்களுக்காக ஒரு பிடிக்கும் கவிதை.

மனம் துடிக்கும்


நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் –உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்

கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும்- நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்

காற்றுக் கலைத்துவிளையாடும்
காதோரக் கூந்தல் பிடிக்கும்
கதைகள் சொல்லி இடையில்
‘கடி’க்கையில் சிவக்கும்
கன்னம் பிடிக்கும்

கவிதைசொன்ன வேளைகளில்-நீ
கண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்

கைகள் பேசிய
மொழி பிடிக்கும்
கண்கள் சொல்லிய
கவி பிடிக்கும்
தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.

பெயரில்லா சொன்னது…

எனக்கு உங்கள் கவிதைப் பிடிக்கும்