புதன், செப்டம்பர் 03, 2008

பூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு


பூக்கள்
எல்லா பூக்களும்

பூத்து விழுகின்றன
சில பூக்கள் மட்டுமே
பூத்து மகிழ்கின்றன









வணங்க சொன்னேன்
வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்


காணமல் இருப்பதும் நானே
எபோதும் இருப்பதும் நானே
காடு மலை கடலும் படைத்தேன்
நட்சத்திர கோளம் படைத்தேன்
சூரியனும் நிலவும் படைத்தேன்
அத்தனையும் படைப்பது எனக்கு
குன் என்ற சொல்லே என்றேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

தோன்றுவது என்னில் என்றேன்
மறைவதும் என்னில் என்றேன்
மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்
மலக்குகளும் நூரில் படைத்தேன்
அதனையும் படைத்து எனக்கு
அடிமைகள் என்றே சொன்னேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

கருவுக்குள் உயிரும் நானே
நெருப்புக்குள் உஷ்ணம் நானே
ஆகாய பெருவெளி நானே
அனைத்திலும் உண்மை நானே

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

வேதங்களும் விதிகளும் நானே
போதகனும் தூதனும் நானே
போதனைகள் செய்ததும் நானே
வேதனைகள் செய்ததும் நானே

காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்
காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே.





5 கருத்துகள்:

mohamedali jinnah சொன்னது…

தொழுது வா உன்னை படைத்தவனை என்று அருமையாக, ஆழமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ...

Rajakamal சொன்னது…

thanks for kind openion annan

sanaah சொன்னது…

அற்புதம்...
அகம் நெகிழும் அழகிய வரிகள்...

ஆனாலும் "போதகனும நானே தூதகனும் நானே" என்பதில் "தூதகனும் நானே" எனபதில் எனக்கு தெளிவில்லை.
தூதுவர்களும் இறைவன் எனபதா தாங்கள் கூற விழைவது?

Rajakamal சொன்னது…

தங்களின் பாராட்டுக்கு நன்றி,

தூதுவனும் நாமே, போதனைகளும் நாமே. என்பதின் பொருள் , வல்ல இறைவனின் ஆணைப் படியே தூதுவரும் வருகிறர், அவனின் ஆணைப் படியே போதனைகளும் செய்கிறார். சொந்த இஷ்டப்படியோ, சொந்த கருத்தையோ சொல்வதில்லை என்பது அதில் மறைமுகமாக இருக்கிறது.

Rajakamal சொன்னது…

தங்களின் பாராட்டுக்கு நன்றி,

தூதுவனும் நாமே, போதனைகளும் நாமே. என்பதின் பொருள் , வல்ல இறைவனின் ஆணைப் படியே தூதுவரும் வருகிறர், அவனின் ஆணைப் படியே போதனைகளும் செய்கிறார். சொந்த இஷ்டப்படியோ, சொந்த கருத்தையோ சொல்வதில்லை என்பது அதில் மறைமுகமாக இருக்கிறது.